நீங்கள் எனது மதத்தை ஏற்காமல் இருக்கலாம், நான் உங்களது மதத்தை ஏற்காமல் இருக்கலாம், ஆனால் அனைவரது மதமும் சரியானதே” என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். அவ்வாறு அனைவரது மதமும் சரியாக இருக்கும்பட்சத்தில், கிருஷ்ணர் இங்கு தோன்றி அதர்மத்தை அழிக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? இதனைப் புரிந்துகொள்ள முயலுங்கள். தர்மம் என்பது ஒருவரது விருப்பத்தைச் சார்ந்தது எனில், அதர்மம் என்பதற்கே இடமிருக்காது.