ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, பணம், நாடு, கல்வி என எந்த பேதமும் இன்றி, அனைத்து மக்களையும் இஸ்கான் வரவேற்கின்றது. ஆன்மீக வாழ்வில் உண்மையாகவும் தீவிரமாகவும் இருப்பவர்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினைச் சோதித்துப் பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள், நிச்சயமாக வாழ்வின் உயர்ந்த நோக்கத்தை அடைவீர்கள். முன்வாருங்கள், உங்களுடைய வாழ்வை கிருஷ்ணருக்கு அர்ப்பணிப்பதைப் பற்றி வினவுங்கள்.
லஹர்ட்: உங்களுடைய இயக்கத்தின் மீது சிலர் குற்றம் சாட்டுகின்றனரே.
ஸ்ரீல பிரபுபாதர்: என்ன குற்றம் சாட்டுகின்றார்கள்?
லஹர்ட்: தங்களுடைய இயக்கம் குடும்பம் மற்றும் மேற்கத்திய சமுதாயத்திற்கு எதிரானதாகச் செயல்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: (தன்னுடைய பல்வேறு...