கர்தம முனிவரிடம் மனு பின்வருமாறு பேசலானார், "வேதத்தின் உருவமாகிய பிரம்மதேவர் வேத அறிவை பரப்புவதற்காக தம் முகத்திலிருந்து பிராமணர்களாகிய தங்களைப் படைத்தார், பொதுவாக பிராமணர்கள் தவம், புத்திசாலித்தனம், புலனின்பத்தில் பற்றின்மை, மற்றும் யோக சித்திகள் நிறைந்தவர்கள். பிராமணர்களின் பாதுகாப்பிற்காக, தம் கரங்களிலிருந்து சத்திரியர்களான எங்களைப் படைத்தார். இப்பொழுது உங்களைச் சந்தித்தால் எனது கடமைகளைப் பற்றி சந்தேகமின்றி தெளிவாக நான் புரிந்து கொண்டேன். உங்களைக் காண முடிந்தது எனது நல்லதிர்ஷ்டம். உங்களின் பாததூளி என் தலையில் படுவது என் பெரும்பாக்கியமாகும். உங்களின் நேரடி அறிவுரையை பெறமுடிந்தமைக்காக பகவானுக்கு நன்றி செலுத்துகிறேன்."