- Advertisement -spot_img

TAG

lectures

கிருஷ்ணரின் மூலமாக அறிவைப் பெறுவோம்

அநேக பல்கலைக் கழகங்களும் கல்வி நிலையங்களும் உள்ளன. ஆனால் அங்கே இத்தகைய விஷயங்கள் விவாதிக்கப்படுவதில்லை. பகவத் கீதையில் கிருஷ்ணர் கொடுக்கும் அறிவு, வேறு எங்கேனும் உள்ளதா? ஒரு தொழில்நுட்ப கல்லூரியில் நான் உரையாற்றியபோது, சில அறிவுள்ள மாணவர்கள், “இறந்த மனிதனுக்கும் உயிருள்ள மனிதனுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை ஆராய்கின்ற தொழில்நுட்பம் எங்கே?” என்று கேட்டார்கள். ஒரு மனிதன் இறக்கும்போது ஏதோ ஒன்று இழக்கப்படுகிறது. அதனை மறுபடியும் பழைய இடத்திலேயே வைக்கும் தொழில் நுட்பம் எங்கே? விஞ்ஞானிகள் ஏன் இந்த பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்யக் கூடாது? ஏனெனில், இது அவர்களுக்கு மாபெரும் தலை வலியைத் தருகின்ற விஷயம். ஆகையால், அவர்கள் இதை விட்டுவிட்டு, சாப்பிடுவது, தூங்குவது, பாதுகாப்பது, உடலுறவு போன்ற தொழில்நுட்பத்தில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

மானிட, மிருக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தல்

ரிஷபதேவர் தனது பிள்ளைகளிடம், "வாழ்க்கையைத் தூய்மைபடுத்திக் கொள்வதால் அளவில்லா மகிழ்ச்சியை அடைய முடியும்" என்று அறிவுறுத்தினார். நாம் அனைவரும் அமைதியும் இன்பமும் காணவே விரும்புகிறோம். ஆனால், இப்பௌதிக உலகில் குறைந்த அளவு இன்பத்தையும் அமைதியையுமே பெற முடிகிறது. நம்முடைய இவ்வாழ்வைத் தூய்மைபடுத்தி ஆன்மீக வாழ்வை நாம் எய்தினால், அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் அனுபவிக்க முடியும்.

முழுமுதற் கடவுள் கிருஷ்ணர்

இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிக உயர்ந்த உன்னதமான நன்மை பயக்கும் செயல்களை ஊக்குவிப்பதால் இஃது ஒரு மிகச்சிறந்த பக்தி இயக்கமாகும். இந்த இயக்கத்திற்காக உலகம் முழுவதும் நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக அறிவிப்பதே எங்களின் ஒரே குறிக்கோள். நாங்கள் கிருஷ்ணராக விரும்பவில்லை, அவரது சிறந்த சேவகராக விரும்புகிறோம். இதுவே எங்களின் கூற்று.

கிருஷ்ண உணர்வில் உறுதியடைதல்

ஒருவன் பௌதிக செல்வத்தின் மிகவுயர்ந்த நிலையை அடையும்போது, துறவிற்கான மனோபாவம் இயற்கையானதாகும். பௌதிக உலகில் இரண்டு விதமான மனோபாவங்கள் உள்ளன--போக (புலனின்பம்), மற்றும் த்யாக (பௌதிக உலகைத் துறத்தல்). இருப்பினும், வழிகாட்டுதல் இல்லாவிடில், துறவினை எவ்வாறு மேற்கொள்வது என்பதை ஒருவரால் அறிய இயலாது. ஒருவன் முதலில் இன்பமடைய விரும்புகிறான்; இன்பத்தில் அவன் விரக்தியடையும்போது, அவன் அதனை துறக்க முயல்கிறான். மீண்டும், துறவில் களைப்படையும்போது, அவன் அனுபவிக்க விரும்புகிறான்; சுவர் கடிகாரத்தின் ஊசலைப் போல அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருக்கிறான். இவ்வாறாக, புலனின்பத்தின் தளத்திற்கும் துறவின் தளத்திற்கும் இடையே நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் ஆடிக் கொண்டிருக்கிறோம்.

குரு என்றால் என்ன?

ந தத் பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக: யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம “எனது அந்த இருப்பிடம் சூரியனாலோ சந்திரனாலோ மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அதனை அடைப வர்கள் ஒருபோதும் இந்த ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை."

Latest news

- Advertisement -spot_img