பிரசேதர்கள் சிவபெருமானின் உபதேசத்தின்படி கடல் நீரினுள் பகவான் விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அவர்களிடம் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு தமது இனிமையான ரூபத்துடன் அவர்களுக்கு காட்சியளித்தார்.
பகவான் ஆயுதங்களை ஏந்திய எட்டு கரங்களுடன் மஞ்சள் பட்டாடை உடுத்தி, கெளஸ்துப மாலை மற்றும் கண்ணைப் பறிக்கும் கிரீடம் அணிந்து, தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றி துதிக்கப்பட்டவராக கருடன் மீது தோன்றினார். கருட தேவர் தம் இறக்கைகளை அசைத்தபடி வேத மந்திரங்களால் பகவானின் புகழ் பாடினார்
பிருது மஹாராஜர் நிறைவேற்றிய யாகங்களால் முழுதும் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு தேவேந்திரனுடன் வேள்விச் சாலையில் தோன்றி, பின்வருமாறு கூறினார். அன்பிற்குரிய பிருது மன்னரே, உங்களது நூறாவது வேள்வியைத் தடுப்பதற்காக இந்திரன் செய்த தவறுகளை மன்னியுங்கள், அறிவில் சிறந்தோர் ஆத்மா வேறு, உடல் வேறு என்பதை உணர்ந்தவர்கள். முந்தைய ஆச்சாரியர்களின் கட்டளைகளின்படி நடப்பதினால் அவர்களுக்கு வெற்றியே கிட்டுகிறது.