“கோவிந்தா, கோவிந்தா…,” “எல்லாம் கோவிந்தாவா?” முதலிய பேச்சுகள் இன்றைய தமிழர்களிடையே தோல்வி, ஏமாற்றம், இழப்பு முதலிய நிகழ்வுகளில் ஒரு வழக்கமாக மாறி விட்டது. “கோவிந்தா” என்ற பெயரைக் கேட்டால், அபசகுனம் என்று பலரும் நினைக்கின்றனர்; ஏதேனும் முக்கிய பணிக்குச் செல்கையில் யாரேனும் “கோவிந்தா” என்று உச்சரித்துவிட்டால், அந்த காரியம் நிறைவேறாமல் போய்விடும் என்று அஞ்சுகின்றனர். கோவிந்த நாமத்தைக் கேலி செய்து எத்தனை எத்தனையோ திரைப்படக் காட்சிகள் வந்துள்ளன. இந்தக் கேலியிலும் அச்சத்திலும் வழக்கத்திலும் ஏதேனும் உண்மை உள்ளதா? சற்று ஆராய்வோம்.