பகவான் ஸ்ரீ சைதன்யரின் அவதாரம், அவரது போதனைகள், பக்தர்களுடன் அவர் புரிந்த லீலைகள் முதலியவற்றை அதிகாரபூர்வமான வேத சாஸ்திர பிரமாணங்களோடு வழங்கும் உன்னதப் படைப்பே ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம். ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் தலைப்பிற்கு அமரத்துவத்தில் உயிர்சக்தியின் இயல்புகள்” என்று ஸ்ரீல பிரபுபாதர் பொருள் கூறுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் பக்த ரூபத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து அனைத்து ஜீவராசிகளுடனும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் புரிந்து யுக தர்மத்தை நிலைநாட்டினார்.