ஆன்மீகம் குறைந்து அதர்மம் பெருகி வரும் தற்போதைய கலி காலத்தில், பலர் பகவானையும் அவரின் தூய பக்தர்களையும் கற்பனைக்கு ஏற்றவாறு சித்தரித்து நாவல்கள் எழுதுவதும் திரைப்படம் எடுப்பதுமாக இருக்கிறார்கள். இந்த அசுரர்கள் பகவானையும் பகவத் பக்தர்களையும் பல்வேறு விதங்களில் கேலி செய்கின்றனர். இவ்வரிசையில், பஞ்ச பாண்டவர்களின் பத்தினியாக வாழ்ந்த திரௌபதியையும் சிலர் அவமதிக்கின்றனர். ஐந்து கணவரை ஏற்றபோதிலும், திரௌபதி கற்புக்கரசியே என்பதை இக்கட்டுரையில் சாஸ்திரங்களின் மூலமாக உறுதிப்படுத்துவோம்.
பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் ஆறுதல் கூறுதல்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும்...