பௌதிக உலகில் நாம் எப்பொழுதும் துன்பத்தை அனுபவிக்கின்றபோதிலும், சில நேரங்களில் மட்டுமே துன்புறுவதாக நாம் சொல்லிக்கொள்கிறோம்; ஏனெனில், துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி எதிர்காலத்தில் மகிழ்ச்சியைத் தரும் என நாம் நம்புகிறோம். உண்மையில், பௌதிக உலகில் மகிழ்ச்சி என்பதே கிடையாது. விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் மரணத்தை வெல்ல முடியும் என்று கனவு காண்கின்றனர். பலரும் இதே கனவில் மிதக்கின்றனர். ஆனால், “எவ்வளவு இனிமையாக இருந்தாலும், எதிர்காலத்தை நம்பாதே” என்பது பண்டிதர்களின் வாக்கு.
ஸ்ரீ-பிரஹ்லாத உவாச
மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா
மிதோ ’பிபத்யேத க்ருஹ-வ்ரதானாம்
அதான்த-கோபிர் விஷதாம் தமிஸ்ரம்
புன: புனஷ் சர்வித சர்வணானாம்
"பிரகலாத மஹாராஜர் கூறினார்: பௌதிக வாழ்வின்மீது மிகவும் பற்றுதல் கொண்டுள்ள நபர்கள் தங்களுடைய கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தினால், நரக சூழ்நிலையை நோக்கி முன்னேறுகின்றனர். ஏற்கனவே மென்றதை மீண்டும்மீண்டும் மென்று வருகின்றனர்.