ஒருமுறை வேடன் ஒருவன் சில பறவைகளைப் பிடிப்பதற்காக காட்டில் வலையினை விரித்து வைத்தான். வேடன் தனது வலையை விரித்திருந்த இடத்திற்கு அருகில் அமைந்திருந்த மரத்தில் இரு சின்னஞ்சிறு பறவைகள் குடியிருந்தன. உணவிற்காக வெளியே சென்றிருந்த அவற்றின் பெற்றோர், அக்குஞ்சுகளை கூட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தியிருந்தன.
இக்கலி யுகத்தில் மக்கள் குறுகிய காலமே வாழ்கின்றனர். வாழ்நாளின் கால அளவு குறைந்து கொண்டே போகிறது. நமது பாட்டனார்களும் முப்பாட்டனார்களும் நூறு வருடங்கள் வாழ்ந்தனர், தந்தை எண்பது வருடங்கள் வரை வாழ்ந்திருப்பார், நாம் அதை விடக் குறுகிய வருடமே வாழ்வோம் என்பதை அனைவரும் அறிவர். இவ்வாறு காலப்போக்கில் வாழ்நாள் இருபது வருடங்களாகக் குறைந்துவிடும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன், இருபது அல்லது முப்பது வருடங்கள் வாழ்ந்தாலே மிகவும் வயோதிகனாகக் கருதப்படுவான், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
பகவத் கீதையில், அர்ஜுனன் நமது நன்மைக்காக ஒரு சாதாரண மனிதனைப் போல நடந்து கொண்டான். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் அவருக்கு தான் தொண்டு செய்ய வேண்டும் என்றும் அர்ஜுனனுக்குத் தெரியும். அவன் சிறந்த பக்தன், தனது வாழ்நாள் முழுவதையும் கிருஷ்ணரின் தொண்டில் அர்ப்பணித்தவன். பகவத் கீதையின் இறுதியில் கிருஷ்ணரின் அறிவுரைகளை ஏற்றுக் கொண்ட அர்ஜுனன், “சரி, தங்களின் விருப்பப்படி நான் போரிடுகிறேன்” என்று கூறினான். இதுவே உண்மையான பக்தி.
பகவத் கீதையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், யோக முயற்சிகளினால் அடைய வேண்டிய பலன் என்னவென்பது ஒரு போர்க்களத்தின் நடுவே கற்பிக்கப்பட்டது! அது மட்டுமல்ல; சொந்த உறவினர்களோடு போர் புரியத் தயாராக நின்ற ஒரு போர் வீரனுக்கு, அதாவது அர்ஜுனனுக்கு அது கற்பிக்கப்பட்டது. வெறும் பாச உணர்வினால் உந்தப்பட்டு, “நான் ஏன் என் சொந்த உறவினர்களுடன் போர் புரிய வேண்டும்” என்று அர்ஜுனன் எண்ணமிட்டு நின்ற சமயம் அது.
பக்தித் தொண்டு எல்லாருக்கும் கிடைப்பதில்லை; புத்திசாலிகள் மற்றும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் மட்டுமே இதனை ஏற்கிறார்கள். அவர்களுடைய ஒரே குறிக்கோள் கிருஷ்ணருக்கு சேவை செய்வதாகும். விடியற் காலையிலிருந்து இரவு நெடு நேரம் வரை அவர்கள் கிருஷ்ணருடைய சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இது கேவலயா பக்தி, அதாவது தூய்மையான பக்தி என்று அழைக்கப்படுகிறது.