- Advertisement -spot_img

TAG

srila prabhupada lecture

பக்தி யோகம்

கிருஷ்ண உணர்வே உன்னத யோகமாகும், இதுவே உன்னத தர்மமும்கூட; ஏனெனில் இது சுயநலமற்றதாக மிளிர்கிறது. எனது சீடர்கள், கிருஷ்ணர் இதைத் தருவார், அதைத் தருவார் என்று எதிர்பார்த்து அவருக்கு சேவை புரிவதில்லை. அஃது, இஃது என்ற தேவை அவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும், உண்மையில், இங்கே பற்றாக்குறை என்பதற்கு இடமே இல்லை. பக்தர்கள் தங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவாக பெறுகின்றனர். கிருஷ்ண உணர்வை அடைபவர் ஏழ்மையாகி விடுவார் என்று யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது. கிருஷ்ணர் எங்கு இருக்கின்றாரோ, அங்கு அனைத்துமே நிறைவாக இருக்கும்; ஏனெனில், கிருஷ்ணர் என்றும் நிறைவானவர். இதனால், “கிருஷ்ணா எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு,” என்று கேட்டு வியாபார பரிமாற்றத்தை வைத்துக் கொள்ள நினைக்கக் கூடாது. எவ்வாறு தன் குழந்தையின் தேவைகளை தக்க சமயத்தில் தந்தை பூர்த்தி செய்கின்றாரோ, அவ்வாறே நமக்கு நன்மை தருபவற்றை பகவானும் தக்க சமயத்தில் நிறைவேற்றிக் கொண்டே இருப்பார். அவ்வாறு இருக்கையில், நாம் அவரிடம் கேட்டுப் பெற வேண்டிய அவசியமென்ன? பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவர், அவர் நமது விருப்பத்தையும் தேவைகளையும் மிகவும் தெளிவாக அறிந்துள்ளார். ஏகோ பஹுனாம் யோ விததாதி காமான், பரம புருஷ பகவான் எண்ணற்ற ஜீவராசிகளின் அனைத்து தேவைகளையும் வாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றார் என்று வேதங்கள் உரைக்கின்றன.

பக்குவமான சமுதாய அமைப்பு

உலகெங்கிலும் உள்ள மனித சமுதாயம், நான்கு வர்ணங்களாகவும் (ஜாதிகளாகவும்), நான்கு ஆஷ்ரமங்களாகவும் (வாழ்வின் பருவங்களாகவும்) பிரிக்கப்பட்டுள்ளன. புத்திசாலிகளின் பிரிவு, போர் புரிவோரின் பிரிவு, விவசாயம் செய்வோரின் பிரிவு, தொழிலாளர்களின் பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளாகும். இவை ஒருவரின் தொழிலுக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு பிரிக்கப்பட்டுள்ளன, பிறப்பினால் அல்ல. மாணவப் பருவம், இல்லற பருவம், ஓய்வு பெற்ற பருவம், பக்திப் பருவம் ஆகிய நான்கும் வாழ்வின் பருவங்களாகும். மனித சமுதாயத்தின் சிறப்பான நன்மைக்கு இப்பிரிவுகள் அவசியம்; இல்லையெனில் எந்த சமூக அமைப்பும் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைய முடியாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவிலும், பரம அதிகாரியான முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்துவதே நோக்கமாக இருக்க வேண்டும்.

உலக ஒற்றுமைக்கான முயற்சி

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் உலக ஒற்றுமை, உலக அமைதி என்பது பலரும் விரும்பக்கூடிய ஒன்று. சர்வதேச மாணவ சமுதாயத்தினரிடையேஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய கீழ்காணும் உரை, நடைமுறைக்கு உகந்த, எளிமையான, தெளிவான...

பற்றாக்குறை என்பது வெறும் மாயையே

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் பெருகி வரும் மக்கள் தொகை உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்பது பொதுவான நம்பிக்கை; ஆனால் சமீபத்திய ஆய்வுகள் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிப்பதற்குத் தேவையான அளவு...

தெய்வீக அன்பினால் பெறப்படும் விடுதலை

பின்வரும் கட்டுரை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால், அக்டோபர் 28, 1976 அன்று, விருந்தாவனத்தில் வழங்கப்பட்ட உரையாகும்.   ஏவம் மன: கர்ம-வஷம் ப்ரயுங்க்தே      ...

Latest news

- Advertisement -spot_img