நீங்கள் இப்போது வானைப் பார்த்தால், அதனை வெற்றிடமாக நினைக்கலாம், ஆனால் அது வெற்றிடமல்ல. உங்களுடைய கண்களில் குறைபாடு உள்ளது. வானில் எண்ணற்ற கிரகங்களும் நட்சத்திரங்களும் உள்ளன, உங்களுடைய கண்கள் அவ்விஷயத்தில் குருடாக உள்ளன. உங்களால் இந்த நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பார்க்க முடிவதில்லை என்பதால், அவை இல்லை என்று ஆகிவிடுமா?
கிருஷ்ணர் விளக்குகின்றார். “அனைத்தும் என்னில் உள்ளன, ஆனால் எல்லாவற்றிலும் நான் இல்லை." இதுவே அசிந்திய-பேதாபேத தத்துவமாகும்--ஒரே நேரத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் கொண்ட தத்துவம். அனைத்தும் கிருஷ்ணரே, ஆனால் நீங்கள் இந்த மேஜையை கிருஷ்ணராக வழிபடக் கூடாது. அவ்வாறு வழிபடுதல் அயோக்கியத்தனம்.
இந்த சூரிய ஒளியும் ஒருவிதத்தில் சூரியனே, அப்படித்தானே? அதே சமயத்தில் சூரிய ஒளி உங்கள் அறையில் இருந்தால், சூரியனே இருக்கிறது என்று கூற இயலாது. இதுவே அசிந்திய-பேதாபேத தத்துவமாகும்.
குரு என்றால் என்ன?
நிருபர்: ஆனால் ஓர் உண்மையான குரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்வதையோ, சொகுசு ஓட்டலில் ஆடம்பரமான அறையில் தங்குவதையோ எவ்வாறு புரிந்துகொள்வது?
ஸ்ரீல பிரபுபாதர்: சில வேளைகளில் முதல் தரமான ஓட்டலில் மக்கள்...
நமது உடலில், மூளை, கைகள், வயிறு, கால்கள் என நான்கு பிரிவுகள் உள்ளதுபோல, இந்த சமுதாயமும் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இஃது இயல்பானதாகும். ஆனால் தலையை வெட்டிவிட்டால் உடலினால் என்ன பயன்? அஃது ஒரு பிணம். அதுபோலவே, பிராமணப் பண்பாடு இல்லாத இன்றைய சமுதாயம் தலையற்ற சமுதாயமாகும். மிக சக்தி வாய்ந்த பாதுகாப்புத் துறையும் (சத்திரியர்களும்), அனைத்து வசதிகளும் கொண்ட பொருளாதாரத் துறையும் (வைசியர்களும்), எண்ணிலடங்காத தொழிலாளர்களும் (சூத்திரர்களும்) இன்றைய சமுதாயத்தில் இருக்கலாம். ஆனால் தலைப் பாகம் (பிராமணர்களின் பிரிவு) இல்லாததால், இன்றைய சமுதாயம் உயிரற்ற உடலாகவே செயல்படுகிறது. இதனால்தான் அனைவரும் துன்பப்படுகிறார்கள்.
பாட்டனார்கள், மாமன்கள், மகன்கள், நண்பர்கள் என அர்ஜுனனின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் அவனுக்கு முன்பாக இருந்தனர். அர்ஜுனன் அவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டியிருந்தது. குருக்ஷேத்திர போர் ஒரே குடும்பத்தினுள் நடைபெற்ற சண்டையாகும். குடும்பத்தில் பலர் மறுபக்கமும் சிலர் அர்ஜுனனின் பக்கமும் குழுமியிருந்தனர். பீஷ்மதேவர், சோமதத்தர் போன்ற பெரியவர்கள், குரு துரோணாசாரியர் மற்றும் பலரையும் அவன் போர்க்களத்தில் சந்திக்க நேர்ந்தது.