லஹர்ட்: உங்களுடைய இயக்கத்தின் மீது சிலர் குற்றம் சாட்டுகின்றனரே.
ஸ்ரீல பிரபுபாதர்: என்ன குற்றம் சாட்டுகின்றார்கள்?
லஹர்ட்: தங்களுடைய இயக்கம் குடும்பம் மற்றும் மேற்கத்திய சமுதாயத்திற்கு எதிரானதாகச் செயல்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: (தன்னுடைய பல்வேறு...
கனவான்களே, தாய்மார்களே, இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஸங்கீர்த்தன இயக்கம் வேத சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டதும் மிகுந்த அங்கீகாரம் பெற்றதுமாகும். உங்களில் பெரும்பாலானோர் பகவத் கீதையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், "பற்பல பிறவிகளுக்குப் பிறகு, புத்திசாலி மனிதன் என்னிடம் சரணடைகின்றான், வாஸுதேவனான நானே எல்லாம் என்பதை உணர்கிறான்."
ஸான்ப்ரான்சிஸ்கோவில் நடந்த நடன நிகழ்ச்சி விரும்பிய பலனைக் கொடுத்தது. நிறைய இளைஞர்களும் யுவதிகளும் கோயிலுக்கு வரத் தொடங்கினர். ஸ்வாமிஜியின் தத்துவம் குறித்து பல்வேறு சவால்கள் அவரிடம் எழுப்பப்பட்டன, அனைத்து கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது. அவருடைய சீடர்கள் அனைவரும் எளிமையான தினசரி பழக்க வழக்கங்களை ஏற்படுத்தப்படும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
லஹர்ட்: நீங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தினை அமெரிக்க நாட்டில் எவ்வாறு நிறுவினீர்கள் என்பது குறித்து கூற இயலுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: இந்த பணியைச் செய்யும்படி நான் எனது ஆன்மீக குருவினால் கட்டளையிடப்பட்டேன், அதன்படி நான் அமெரிக்காவிற்கு வந்தேன். நான் இங்கு தனியாக வந்தேன், எந்த உதவியும் பணமும் என்னிடம் இருக்கவில்லை. எப்படியோ நான் இங்கு தொடர்ந்து தங்கிவிட்டேன்
எம்பெருமானே, மனிதன், மிருகம், சாது, தேவர், மீன், ஆமை என பல்வேறு ரூபங்களில் அவதரித்து, அதன் மூலமாக முழு படைப்பையும் பராமரித்து ஒவ்வொரு யுகத்திலும் அசுரக் கொள்கைகளை நீங்கள் வதம் செய்கிறீர்கள். இதனால், எம்பெருமானே, நீங்கள் தர்மத்தின் பாதுகாவலராகத் திகழ்கிறீர்கள். கலி யுகத்திலோ நீங்கள் உங்களை பரம புருஷ பகவானாக வெளிக்காட்டிக்கொள்வதில்லை. எனவே, நீங்கள் த்ரி-யுக, அல்லது மூன்று யுகங்களில் மட்டும் தோன்றக்கூடிய இறைவன் என்று அறியப்படுகிறீர்கள்.