டாக்டர் ஃப்ரேஜர்: ஆன்மீக ஆத்மாவும் உடலும் எப்போதும் வேறுபட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள், பக்குவ உணர்வு பெற்ற ஆத்மா உடலின் வலிகளை உணர்கிறதா? வேறுவிதமாகக் கூறினால், கிருஷ்ண உணர்வில் இருப்பவர்களுக்கு உடல் ரீதியிலான நோய்கள் வருமா?
பக்தி என்றால் அன்புத் தொண்டு என்று பொருள். ஒவ்வொரு தொண்டும் தன்னிடம் ஒரு கவர்ந்தீர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது, அந்தத் தன்மையே அதை செய்பவரை மேலும் மேலும் அந்தத் தொண்டில் முன்னேற்றமடையச் செய்கிறது. இந்த உலகிலுள்ள ஒவ்வொருவரும் நிரந்தரமாக ஏதாவதொரு தொண்டில் ஈடுபட்டுள்ளோம். அந்தத் தொண்டிற்கான ஊக்கம் நாம் அதிலிருந்து பெறும் இன்பத்தாலேயே கிடைக்கிறது. ஒரு கிருஹஸ்தன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின்பால் உள்ள பாசத்தால், இரவு பகலாக உழைக்கிறான்.
டாக்டர் ஃப்ரேஜர்: நீங்கள் கூறுவதை என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. கிருஷ்ண உணர்வு என்பது மிகவும் இயற்கையான ஒன்றை பின்பற்றுவதாக தோன்றுகிறது. அதிகமாக சாப்பிடுதல், அதிகமாக பாலுறவில் ஈடுபடுதல், அதிகமாக எதைச் செய்தாலும் அது இயற்கையானதல்ல. ஸ்ரீல பிரபுபாதர்: முதலில், நீங்கள் ஆன்மீக ஆத்மா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்த உடல் அல்ல என்பதே அடிப்படைக் கொள்கையாகும். ஆனால் நீங்கள் இந்த உடலை ஏற்றிருப்பதால், உடலினால் எழும் பலவிதமான துன்பங்களினால் பாதிக்கப்படுகிறீர்கள். நம்முடைய துன்பங்கள் அனைத்தும் இந்த ஜடவுடலைச் சார்ந்ததாகும். எனவே, இந்த பௌதிக உடலே நம்முடைய பிரச்சனையாகும்.
தத்துவ உணர்வு கொண்ட மனதை உடையவன் எல்லா படைப்புகளுக்கும் ஆதி என்ன என்பதை அறிவதில் ஆர்வமுடையவனாக இருக்கிறான். இரவில் அவன் வானத்தைக் காணும்போது, இயற்கையாகவே, இந்த நட்சத்திரங்கள் யாவை, எங்கு அமைந்துள்ளன, அங்கு யார் வாழ்கின்றனர் போன்ற கேள்விகளை அவன் கேட்கின்றான்.
ஆம், தற்போதைய சூழ்நிலையில், கிருஷ்ணரைக் காண்பதற்கான பயிற்சியை நீங்கள் இன்னும் பெறாத காரணத்தினால், அவர் கருணை கூர்ந்து நீங்கள் காண்பதற்கு உகந்த வடிவில் தோன்றுகிறார். உங்களால் மரத்தையும் கல்லையும் காண முடியும், ஆனால் ஆன்மீக விஷயங்களை உங்களால் காண முடிவதில்லை. உங்கள் தந்தை மருத்துவமனையில் இருக்கும்போது இறந்துவிடுவதாக எடுத்துக்கொள்வோம். அவரது படுக்கையின் அருகில் அமர்ந்து, என் தந்தை போய்விட்டாரே என்று நீங்கள் அழுகிறீர்கள். அவர் போய் விட்டார் என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? போய்விட்ட பொருள் என்ன?