இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிக உயர்ந்த உன்னதமான நன்மை பயக்கும் செயல்களை ஊக்குவிப்பதால் இஃது ஒரு மிகச்சிறந்த பக்தி இயக்கமாகும். இந்த இயக்கத்திற்காக உலகம் முழுவதும் நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக அறிவிப்பதே எங்களின் ஒரே குறிக்கோள். நாங்கள் கிருஷ்ணராக விரும்பவில்லை, அவரது சிறந்த சேவகராக விரும்புகிறோம். இதுவே எங்களின் கூற்று.
சீடர்: ஆசைப்படக் கூடாது என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லும்போது, அவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
ஸ்ரீல பிரபுபாதர்: அவருக்குத் தொண்டு செய்வதற்கு மட்டுமே நாம் ஆசைப்பட வேண்டும் என்பதையே அவர் அங்கு குறிப்பிடுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகத்-ஈஷ காமயே, "தனம் வேண்டேன், ஜனம் வேண்டேன், அழகிய பெண்களும் வேண்டேன்" என்று கூறினார். அப்படியெனில், அவர் வேண்டுவது என்ன? "நான் வேண்டுவதெல்லாம் கிருஷ்ண சேவை மட்டுமே" என்கிறாரே தவிர, "எனக்கு இது வேண்டாம், அது வேண்டாம். நான் சூன்யமாகிவிடுகிறேன்," என்று அவர் கூறவில்லை.
ஒருவன் பௌதிக செல்வத்தின் மிகவுயர்ந்த நிலையை அடையும்போது, துறவிற்கான மனோபாவம் இயற்கையானதாகும். பௌதிக உலகில் இரண்டு விதமான மனோபாவங்கள் உள்ளன--போக (புலனின்பம்), மற்றும் த்யாக (பௌதிக உலகைத் துறத்தல்). இருப்பினும், வழிகாட்டுதல் இல்லாவிடில், துறவினை எவ்வாறு மேற்கொள்வது என்பதை ஒருவரால் அறிய இயலாது. ஒருவன் முதலில் இன்பமடைய விரும்புகிறான்; இன்பத்தில் அவன் விரக்தியடையும்போது, அவன் அதனை துறக்க முயல்கிறான். மீண்டும், துறவில் களைப்படையும்போது, அவன் அனுபவிக்க விரும்புகிறான்; சுவர் கடிகாரத்தின் ஊசலைப் போல அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருக்கிறான். இவ்வாறாக, புலனின்பத்தின் தளத்திற்கும் துறவின் தளத்திற்கும் இடையே நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் ஆடிக் கொண்டிருக்கிறோம்.
ஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தைப் பற்றிப் பேசுவதால் அவர்கள் “பெரிய மனிதர்கள்" என்று கருதப்படுகிறார்கள்.
டாக்டர் சிங்: இன்னும் பத்து ஆண்டுகளில் அது நடக்கும் என்கிறார்கள்.
நாம் கடவுளை உணரவில்லை யெனில், நமது வாழ்விற்கும் நாயின் வாழ்விற்கும் என்ன வித்தியாசம்? நான் கொழுத்த வேட்டை நாய் என்று ஒரு நாய் நினைக்கின்றது, நான் மிகப் பணக்கார டச்சுக்காரன் என்று ஒரு மனிதன் நினைக்கிறான். ஆகவே, நாயிற்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?