ஒருவன் பௌதிக செல்வத்தின் மிகவுயர்ந்த நிலையை அடையும்போது, துறவிற்கான மனோபாவம் இயற்கையானதாகும். பௌதிக உலகில் இரண்டு விதமான மனோபாவங்கள் உள்ளன--போக (புலனின்பம்), மற்றும் த்யாக (பௌதிக உலகைத் துறத்தல்). இருப்பினும், வழிகாட்டுதல் இல்லாவிடில், துறவினை எவ்வாறு மேற்கொள்வது என்பதை ஒருவரால் அறிய இயலாது. ஒருவன் முதலில் இன்பமடைய விரும்புகிறான்; இன்பத்தில் அவன் விரக்தியடையும்போது, அவன் அதனை துறக்க முயல்கிறான். மீண்டும், துறவில் களைப்படையும்போது, அவன் அனுபவிக்க விரும்புகிறான்; சுவர் கடிகாரத்தின் ஊசலைப் போல அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருக்கிறான். இவ்வாறாக, புலனின்பத்தின் தளத்திற்கும் துறவின் தளத்திற்கும் இடையே நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் ஆடிக் கொண்டிருக்கிறோம்.
ஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தைப் பற்றிப் பேசுவதால் அவர்கள் “பெரிய மனிதர்கள்" என்று கருதப்படுகிறார்கள்.
டாக்டர் சிங்: இன்னும் பத்து ஆண்டுகளில் அது நடக்கும் என்கிறார்கள்.
நாம் கடவுளை உணரவில்லை யெனில், நமது வாழ்விற்கும் நாயின் வாழ்விற்கும் என்ன வித்தியாசம்? நான் கொழுத்த வேட்டை நாய் என்று ஒரு நாய் நினைக்கின்றது, நான் மிகப் பணக்கார டச்சுக்காரன் என்று ஒரு மனிதன் நினைக்கிறான். ஆகவே, நாயிற்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?
இவ்வுலக வாழ்க்கை துயரங்கள் நிறைந்தது என்று கிருஷ்ணர் சொல்கிறார்; மேலும், இவ்விடம் அஷாஸ்வதம், தற்காலிகமானதும்கூட. சரி. துன்பகரமானதாக இருந்துவிட்டுப் போகட்டும். நான் இங்கேயே ஓர் அமெரிக்கனாகவோ இந்தியனாகவோ வாழ்ந்து விடுகிறேன் என்று நீங்கள் சரிகட்ட முடியாது. நீங்கள் எக்காலத்துக்கும் அமெரிக்கனாகவே இருப்பது சாத்தியமில்லை. அந்நிலையிலிருந்து நீங்கள் உதைத்து வெளியேற்றப்படுவது நிச்சயம்.
ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் கடவுளைப் பற்றி கற்றுத் தருகிறோம். அவர் இந்துவோ, கிருஸ்தவரோ, இஸ்லாமியரோ அல்ல. கடவுள் கடவுளே. அனைவரும் கடவுள் உணர்வுடன் இருக்க வேண்டும். இதுவே எங்கள் இயக்கம். நாங்கள் கடவுளிடம் அன்பு செலுத்தும்படி பிரச்சாரம் செய்து வருகிறோம். ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார் என்பது பொருட்டல்ல. அவருக்குக் கடவுளின் மீது அன்பு இருக்கிறதா என்பதை மட்டுமே நாங்கள் கவனிக்கின்றோம்.