ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண உணர்வின் செய்தி ஆன்மீக உலகிலிருந்து வருகிறது. அஃது இந்த ஜடவுலகைச் சார்ந்தது அல்ல. அதனால் சில சமயம் இதனை மனிதர்கள் தவறுதலாக புரிந்துகொள்ளக் கூடும். எனவே, நாம் அவர்களுக்கு இதனைத் தெளிவாக விளக்க வேண்டும். ஆத்மா என்றால் என்ன என்பதைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. பெரிய பெரிய விஞ்ஞானிகளும் பெரிய பெரிய தத்துவவாதிகளும்கூட ஆத்மாவைப் பற்றியும் ஆன்மீக உலகைப் பற்றியும் அறியாமல் இருக்கின்றனர். அதனால் சில நேரங்களில் அவர்கள் இதனைப் புரிந்துகொள்வதை மிகவும் கடினமாக உணர்கின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணர் என்றால் “அனைவரையும் கவரக்கூடியவர்” என்று பொருள். கடவுள் அனைவரையும் கவரக்கூடியவராக இல்லாவிடில், அவர் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்? யாரேனும் ஒருவர் கவரக்கூடியவராக இருந்தால், அவர் முக்கியமானவர், சரியா?
சமுதாயத்தில் மூளை இல்லாவிடில், அதன் செயல்பாடுகள் அனைத்தும் பயனற்றதாக மாறிவிடும் என்பதை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தைச் சார்ந்த சார்லஸ் ஹென்னிஸ் என்பவரிடையே எடுத்துரைக்கும் உரையாடல்.
தற்போதைய நவீன சமுதாயத்திற்கு மாற்று வழியாக, எளிய வாழ்வையும் உயர்ந்த சிந்தனையையும் கொண்ட சமுதாயத்தை அமைப்பது குறித்து, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர், ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார...
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நம்பிக்கை அவசியமாக இருக்க வேண்டும். எனவேதான், கிருஷ்ணர் பகவத் கீதையில், தானே பரம்பொருள் என்பதை முதலில் நிரூபிக்கின்றார்; அதன் பிறகே தன்னிடம் சரணடையும்படி கூறுகிறார்.