பக்தி, ஞானம், மற்றும் துறவின் இலட்சணங்கள் பொருந்திய பல்வேறு வைஷ்ணவர்கள் இந்தியாவில் இருந்தனர். எனினும், கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு ஸ்ரீல பிரபுபாதர் ஒருவரே தக்க தகுதிகளைப் பெற்றிருந்தார் என்பதே உண்மை. பகவான் சைதன்யரின் உபதேசங்கள், ஆன்மீக குருவின் ஆணை, கிருஷ்ணரின் திருநாமம் ஆகியவற்றின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, இந்தியாவிற்கு வெளியே கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்வதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டவர் ஸ்ரீல பிரபுபாதர் மட்டுமே.
பெட்ரோல் பிரச்சனை என்னும் மற்றொரு பிரச்சனையை உருவாக்கி யுள்ளனர். நாகரிகம் என்ற பெயரில் இந்த பிரச்சனையை உருவாகியுள்ளது. இந்த மோட்டார் கார்கள் வருவதற்கு முன்பு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் விருந்தினர் ஒருவருக்குமிடையில் ஆகஸ்ட் 14, 1971ஆம் ஆண்டில் இலண்டன் நகரில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி
ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் கடவுளைப் பற்றி கற்றுத் தருகிறோம். அவர்...
“புலனின்பமே பிரதானம்” என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற்போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.