- Advertisement -spot_img

TAG

srimad bhagavatam

பரீக்ஷித் கலியை வரவேற்ற விதம்

பரீக்ஷித் கலியை தண்டித்ததைப் பற்றி கேள்விப்பட்ட சௌனக ரிஷி, அவ்விஷயம் கிருஷ்ணரோடு தொடர்புடையதாக இருப்பின் விரிவாக விளக்குமாறு வேண்டினார். பகவத் பக்தர்கள் பகவானின் தாமரைப் பாதங்களிலிருந்து கிடைக்கும் தேனைச் சுவைப்பதில் பழக்கப்பட்டவர்கள். பகவானின் புனித நாமம் மற்றும் லீலைகளை கேட்பதும் பாடுவதும் மரணத்தின் பிடியிலிருந்து தப்புவதற்குரிய ஒரே வழியாகும். எமராஜன் பகவானின் மிகச்சிறந்த பக்தர் என்பதால், பகவானின் பக்தித் தொண்டில் இடைவிடாமல் ஈடுபட்டுள்ள தூய பக்தர்களின் கீர்த்தனங்களுக்கும் யக்ஞங்களுக்கும் அழைக்கப்படுவதை அவர் பெரிதும் விரும்புகிறார். எனவே, சௌனகரைத் தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் நைமிஷாரண்யத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாகத்திற்கு எமராஜரையும் அழைத்திருந்தனர். மரணமடைய விரும்பாத வர்களுக்கு அது நல்ல பலனை அளித்தது.

பாண்டவர்களின் துறவு

பகவான் தம் இருப்பிடத்திற்குச் சென்று விட்டதையும் யது குலத்தின் முடிவையும் கேள்விப்பட்ட யுதிஷ்டிரர் தாமும் பகவானின் நித்ய வாசஸ்தலத்திற்குத் திரும்பி விட முடிவு செய்தார். அதைக் கேட்ட குந்திதேவியும் பரம புருஷரின் பக்தித் தொண்டில் முழு கவனத்துடன் ஈடுபட்டு பௌதிக வாழ்வின் சுழற்சியிலிருந்து விடுபட்டாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் சுய உருவத்துடன் இம்மண்ணுலகை விட்டுச் சென்ற அந்த நாளிலிருந்து, ஏற்கனவே ஒரு பகுதி மட்டும் தோன்றியிருந்த கலி முழுமையாக வெளிப்பட்டது. அதனால் பூமியின் எல்லாப் பகுதிகளிலும் பலவிதமான அமங்களமான சூழ்நிலைகள் உருவாயின. புத்திசாலியான யுதிஷ்டிர மஹாராஜர், பேராசை, பொய்மை, நேர்மையின்மை, மூர்க்கத்தனம் போன்றவை கலி யுகத்தின் ஆதிக்கத்தால் மேலோங்குவதைப் புரிந்து கொண்டார். அவர் தனக்கு நிகரான தகுதியைப் பெற்றிருந்த பேரன் பரீக்ஷித்தை அரியாசனத்தில் அமர்த்தினார். பின்னர், அநிருத்தனின் மகனான வஜ்ரனை சூரசேன நாட்டின் அரசனாக அமர்த்தினார்.

யுதிஷ்டிரரின் வருத்தம்

கிருஷ்ணரையும் யதுக்களையும் பார்த்து அவர்களது எதிர்காலத் திட்டம் பற்றி அறிவதற்காக அர்ஜுனன் துவாரகைக்கு பயணமானான். சில மாதங்கள் கழிந்த பின்னர், அர்ஜுனன் திரும்பி வருவதில் கால தாமதம் ஏற்படுவதையும் பல தீய சகுனங்களையும் கண்டு யுதிஷ்டிரர் கவலைக்குள்ளானார். கலியின் ஆதிக்கத்தால் நித்ய காலத்தின் போக்கு மாறிவிட்டதை அவர் கண்டார். அது நினைக்கவே பயங்கரமாக இருந்தது. பருவ காலங்கள் ஒழுங்கின்றி மாறின. மக்கள் கோபக்காரர்களாகவும் பேராசைக்காரர்களாகவும் ஏமாற்றுபவர்களாகவும் மாறத் தொடங்கினர். மேலும், அவர்கள் தங்களது வாழ்க்கைத் தேவைகளுக்காக தீய வழிமுறைகளைக் கையாள்வதையும் அவர் கண்டார். நண்பர்களுக்கு இடையிலுள்ள சாதாரண விவகாரங்களில் கூட வஞ்சகம் நிறைந்துவிட்ட

பீஷ்மதேவரின் மரணம்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும்...

பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் ஆறுதல் கூறுதல்

பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் ஆறுதல் கூறுதல் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும்...

Latest news

- Advertisement -spot_img