பகவத் கீதையில் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ஹட யோகம் என பல யோக முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. எனவேதான், இங்கு (4.1) யோகம் என்னும் சொல் உபயோகிக்கப்படுகிறது. ’யோகம்’ என்ற சொல்லுக்கு இணைப்பது என்று பொருள். ’யோகம்’ என்றால் நாம் நமது உணர்வை இறைவனுடன் இணைக்கின்றோம் என்று பொருள்.
கிருஷ்ணருக்காக உழைப்பது நம் எல்லோருடைய கடமையாகும். இதனை உண்மை என்று உணர்ந்தவர் மஹாத்மாவாகின்றார். கோடானு கோடி ஜன்மங்களுக்குப் பிறகு, இந்த உண்மையை உணரும்போது, அவன் தன்னிடம் சரணடைவதாக பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகின்றார். வாஸுதேவம் ஸர்வம் இதி. உண்மையிலேயே அறிவாளி என்பவர், வாஸுதேவரே (கிருஷ்ணர்) எல்லாம் என உணருகின்றார்.