கிருஷ்ணரையும் யதுக்களையும் பார்த்து அவர்களது எதிர்காலத் திட்டம் பற்றி அறிவதற்காக அர்ஜுனன் துவாரகைக்கு பயணமானான். சில மாதங்கள் கழிந்த பின்னர், அர்ஜுனன் திரும்பி வருவதில் கால தாமதம் ஏற்படுவதையும் பல தீய சகுனங்களையும் கண்டு யுதிஷ்டிரர் கவலைக்குள்ளானார்.
கலியின் ஆதிக்கத்தால் நித்ய காலத்தின் போக்கு மாறிவிட்டதை அவர் கண்டார். அது நினைக்கவே பயங்கரமாக இருந்தது. பருவ காலங்கள் ஒழுங்கின்றி மாறின. மக்கள் கோபக்காரர்களாகவும் பேராசைக்காரர்களாகவும் ஏமாற்றுபவர்களாகவும் மாறத் தொடங்கினர். மேலும், அவர்கள் தங்களது வாழ்க்கைத் தேவைகளுக்காக தீய வழிமுறைகளைக் கையாள்வதையும் அவர் கண்டார்.
நண்பர்களுக்கு இடையிலுள்ள சாதாரண விவகாரங்களில் கூட வஞ்சகம் நிறைந்துவிட்ட