மரணத்தை மறவாதீர்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

மரணத்தைப் பற்றிய புரிந்துணர்வுடன் செயல்படுவதே தத்துவபூர்வமான வாழ்க்கை என்பதை

ஸ்ரீல பிரபுபாதர் இந்த உரையாடலில் தமது சீடர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

 

சீடர் 1: ஸ்ரீல பிரபுபாதரே, சமீபத்தில் மாணவன் ஒருவன் இங்கே தற்கொலை செய்து கொண்டான். தற்போது இதுபோன்ற தற்கொலைகள் நாடெங்கிலும் நடைபெறுகின்றன.

ஸ்ரீல பிரபுபாதர்: சிலர் வெளிப்படையாக தற்கொலை செய்துகொள்கின்றனர், சிலர் வெளியே தெரியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். புலனின்பத்திற்காக மனித வாழ்வை வீணடிப்பதும் தற்கொலைதானே. அறிவைப் பெறுவதற்கு வாய்ப்பு இருந்தும், மக்கள் நாய்களாகவும் பூனைகளாகவும் வாழ்கின்றனர், இதுவும் தற்கொலையே.

சீடர் 2: சென்ற மாதம் பத்திரிகையில் வந்த பரபரப்பான செய்தி யாதெனில், மாணவன் ஒருவன் நூலகத்திற்குச் சென்று அணுகுண்டு தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றிய அனைத்து தகவலையும் சேகரித்துள்ளான். அணுகுண்டு தயாரிப்பதற்கான எல்லா விளக்கங்களையும் யார் வேண்டுமானாலும் பொது நூலகத்திலிருந்து சேகரிக்க இயலும் என்று அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: இதுவும் தற்கொலைதான். அணுகுண்டு தயாரிப்பதால் வாழ்வு வெற்றியடைந்து விட்டதாக அவன் கருதுகிறான். ஆனால் தன்னை மரணத்திலிருந்து காத்துக்கொள்வது எவ்வாறு என்பதை அவன் அறிவதில்லை. மரணத்திலிருந்து மக்களைக் காப்பாற்றக்கூடிய எதையும் அவன் செய்து விடவில்லை. ஆகவே, அறிவியல் முன்னேற்றத்தினால் என்ன பயன்? நாயும் இறக்கப்போகிறது, இவனும் இறக்கத்தான் போகிறான், இதில் என்ன வித்தியாசம்?

சீடர் 1: இரண்டாம் உலகப் போரை விரைந்து நிறுத்தி இறப்பை தடுப்பதற்கே விஞ்ஞானிகள் அணுகுண்டைத் தயாரித்தனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: இறப்பை அவர்களால் எவ்வாறு தடுக்கவியலும்? இறப்பின் வேகத்தை அவர்களால் அதிகரிக்கவே இயலும். இறப்பைத் தடுப்பது எவ்வாறு என்பதை அவர்கள் அறியார்கள். உண்மையான பிரச்சனை இதுவே: ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதிஶீபிறப்பு, இறப்பு, முதுமை, நோய். இப்பிரச்சனைகளை எந்த விஞ்ஞானியாவது தீர்க்க இயலுமா? இவை நான்கும் மிகவும் மோசமான பிரச்சனைகள், மனோவியல் அறிஞரோ வேதியியல் வல்லுனரோ இதனை தீர்க்க இயலுமா?

சீடர் 1: ரஷ்யா அணுகுண்டுகளை அதிக அளவில் வைத்துள்ளதால் அமெரிக்காவும் வைத்துள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் இருவருமே அதனை உபயோகிக்க அஞ்சுகிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. அவர்கள் அதனைப் பயன்படுத்தியாக வேண்டும். அதுவே இயற்கையின் ஏற்பாடு. இது ஜோசியமல்ல; அதன் விளைவு இதுதான். இதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

சீடர் 1: பிரச்சனை என்னவெனில், அவ்வாறு உபயோகித்தால் அதிக அளவில் அழிவு ஏற்படும் என்பதால், அதனை உபயோகிக்க அஞ்சுகிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: அதிக அளவோ குறைந்த அளவோஶீஆனால் ஆயுதங்கள் உபயோகிக்கப்படும். தலைவர்கள் போரைத் தவிர்க்க விரும்பினால், அவர்கள் மூன்று விஷயங்களை அறிய வேண்டும்: இறைவனே அனைத்திற்கும் உரிமையாளர், அவரே அனைத்தையும் அனுபவிப்பவர், அவரே அனைவருக்கும் நண்பர். ஆனால், தலைவர்கள் இதற்கு நேர்மாறாக நினைக்கின்றனர்: நானே உரிமையாளன், நானே அனுபவிப்பவன், நானே அனைவருக்கும் நண்பன். ஏனெனில், நானே கடவுள் என்று அவர்கள் நினைக்கின்றனர். இஃது அசுரத்தனம். நிக்ஸன் அனைவருக்கும் நண்பர் என்று கூறி தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் அவரே விரோதி என்றும் நிரூபிக்கப்பட்டார். கிருஷ்ணரைத் தவிர யாராலும் அனைவருக்கும் நண்பராக இருக்க இயலாது.

சீடர் 3: தூய பக்தர் அனைவருக்கும் நண்பர் இல்லையா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அவர் கிருஷ்ணரது செய்தியினை எடுத்துச் சொல்கிறார். உலக நண்பரின் செய்தியினை யாராவது மற்றவர்களுக்கு வழங்கினால், அவரும் உலக நண்பரே. கிருஷ்ணரே அனைவருக்கும் நண்பர் (ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாம்), தூய பக்தர் அச்செய்தியை அனைவருக்கும் கூறுகிறார். ஆகவே கிருஷ்ணரது பிரதிநிதியைத் தவிர்த்து வேறு யாரும் உங்களுக்கு நண்பராக இருக்க இயலாது. இப்பௌதிக உலகில், நான் உங்களின் பகைவன், நீங்கள் எனது பகைவன். இதுவே பௌதிக உலகின் அடிப்படை. ஆனால், ஆன்மீக உலகம் இதற்கு நேர்மாறானது: நான் உங் களது நண்பன், நீங்கள் எனது நண்பன், ஏனெனில், கிருஷ்ணர் நம் இருவருக்கும் பிரியமான நண்பர்.

சீடர் 3: பிரபுபாதரே, உங்களது புத்தகங்களை விநியோகிக்கும்போது, மக்களிடம் நாம் அவர்களது நண்பர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். அதுவே, உண்மையான நட்பு. சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், கோத நித்ரா ஜாஓ மாயா-பிஸாசீர கோலே ஏனேசி ஔஷதி மாயா-நஸிபரோ லாகி / ஹரி-நாம-மஹா-மந்த்ர- லஓ துமி மாகி. மக்களே, நீங்கள் மாயையின் மடியில் உறங்கிக் கொண்டுள்ளீர். எவ்வளவு காலம் இவ்வாறு உறங்கி இவ்வுலகில் துன்புறப் போகிறீர்கள்? நான் மருந்து கொண்டு வந்துள்ளேன்ஶீஹரே கிருஷ்ண மஹா மந்திரம். இதனை ஏற்று உறக்கத்திலிருந்து விடுபடுவீராக.

சீடர் 1: நமது கிருஷ்ண பக்தி இயக்கம் வேகமாக விரைந்து பரவுவதற்கு அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் உதவுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது, ஆனால், மக்கள் முட்டாள்களாக இருக்கின்ற காரணத்தினால் அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சுவதில்லை. இறப்பிற்கான அச்சுறுத்தல் உள்ளது, அனைவருமே இறப்பர். இதுதான் உண்மையான பிரச்சனை, ஆனால் யார் இதை கண்டுகொள்கிறார்கள்? இறப்பிற்கு எதிராக ஒன்றும் செய்யவியலாது என்பதால் மக்கள் இதனைக் கண்டுகொள்வதில்லை.

சீடர் 4: இறப்பை எதிர்கொள்ள கற்க வேண்டும் என்று உங்களிடமிருந்தும் உங்களது புத்தகங்களிலும் அடிக்கடி கேள்வியுறுகிறோம். ஆனாலும் இறப்பை மறைக்கும் கலாச்சாரத்தில் நாங்கள் வளர்ந்த காரணத்தாலும், அமெரிக்காவில் இறப்பவர்களைக் காண்பது அரிது என்பதாலும் உங்களது சீடர்களான எங்களுக்கே இதில் இன்னும் நம்பிக்கை வரவில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் இறக்கப் போவதில்லை என நினைக்கிறீர்களா?

சீடர் 4: இறப்பேன் என்பதை அறிவேன், ஆனால் அதை உணரும் நிலைக்கு வருவது எவ்வாறு?

ஸ்ரீல பிரபுபாதர்: அனைவரும் இறக்கின்றனர். உங்களது தாய் இறக்கிறாள், தந்தை இறக்கிறார், நண்பர்கள் இறக்கிறார்கள். இதையே உங்களால் புரிந்துகொள்ள இயலாதபட்சத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் எவ்வளவோ மனிதர்களும் விலங்குகளும் மடிகின்றனர் என்பதை எவ்வாறு புரிந்துகொள்ளப் போகிறீர்கள்? இறப்பைத் தவிர்க்க இயலாது. ஆனாலும், நான் இறக்கப்போவதில்லை என நினைக்கின்றோம். இதுவே நமது உண்மையான பிரச்சனை. யாரும் இறக்க விரும்புவதில்லை, ஆனாலும் அனைவரும் இறக்கின்றனர். இப்பிரச்சனையை விஞ்ஞானிகளான அயோக்கியர்களால் தீர்க்க இயலாது.

பசுபிக் கடலில் ஒரு நாய் நீந்துவதைக் கண்டவன், நான் இந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டால் இக்கடலைக் கடந்துவிடலாம்” என்று நினைத்தானாம். இந்த பெயரளவிலான விஞ்ஞானிகளும் தத்துவவாதிகளும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய பிரச்சனைகளைத் தீர்ப்பர் என நாம் நம்புவது நாய் வாலை பிடித்துக் கொண்டு பசுபிக் பெருங்கடலை கடக்க முயற்சிப்பதைப் போன்றதாகும். இந்த விஞ்ஞானிகள் நாய்களைப் போன்றவர்கள், அவர்களது வாலைப் பிடித்துக்கொள்வது உதவாது.

சீடர் 1: ஒருவன் இறப்பின் உண்மை நிலையை தத்துவத்தின் மூலமாகப் புரிந்துகொள்ள வேண்டுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: இன்றைய காலகட்டத்தில் மனக்கற்பனையை தத்துவமாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையைக் கண்டறிவதே தத்துவமாகும். நான் இவ்வாறாக நினைக்கிறேன், அவர் இவ்வாறாக நினைக்கிறார், அவ்வாறாக நினைக்கிறார்,” என்று யூகிப்பதெல்லாம் தத்துவமல்ல. அவை மனக்கற்பனையே. பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:க-தோஷானுதர்ஷனம், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றை எப்போதும் நினைவில் வைத்து கிருஷ்ண உணர்வின் மூலம் நாம் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். இதுவே தத்துவம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives