நாம் அற்பமானவர்கள், அகந்தை வேண்டாம்

Must read

மூலம்: ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் Śrīla Prabhupāda-līlāmṛta

ஒருநாள் தமால் கிருஷ்ண கோஸ்வாமி அவர்கள் முரளிதரர் என்னும் புதிய பக்தர் வரைந்த ஓவியத்தை ஸ்ரீல பிரபுபாதரிடம் காண்பித்தார். ஆன்மீக வானத்தை விளக்கும் அந்த ஓவியத்தில் பல்வேறு ஆன்மீக கிரகங்கள் இருந்தன, ஒரு மூலையில் ஜடவுலகமும் இருந்தது. அது பிரபுபாதருக்குப் பிடித்திருந்தது.
அதைப் பார்த்த பிரபுபாதர் தமால கிருஷ்ணரிடம் ஒட்டுமொத்த படைப்பு குறித்து விளக்கத் தொடங்கினார், “கிருஷ்ணர் பரம புருஷ பகவான். அவர் உயர்ந்த கிரகமான கிருஷ்ண லோகத்தில் வீற்றுள்ளார். கிருஷ்ண லோகத்தைச் சுற்றி பகவானின் விரிவங்கங்களான நான்கு கை நாராயணரின் வசிப்பிடங்களான எண்ணிலடங்கா ஆன்மீக கிரகங்கள் உள்ளன. அந்த கிரகங்கள் அனைத்தும் கிருஷ்ணரின் உடலிலிருந்து வெளிப்படும் பிரகாசமான எல்லையற்ற பிரம்மஜோதியில் நிலைபெற்றுள்ளன. அதன் ஒரு சிறிய மூலையில் ஒட்டுமொத்த ஜடவுலகமும் உள்ளது.
“பகவான் கிருஷ்ணரின் விரிவங்கமான மஹாவிஷ்ணுவிடமிருந்து இந்த ஜடவுலகம் வெளிப்படுகின்றது. காரணக் கடலில் வீற்றிருக்கும் அவரது சுவாசத்தின்போது அவரது வியர்வையிலிருந்து எண்ணற்ற பௌதிக பிரபஞ்சங்கள் வெளிப்படுகின்றன. மஹாவிஷ்ணு ஒவ்வொரு பிரபஞ்சத்திற்குள்ளும் கர்போதகஷாயி விஷ்ணுவாக விரிவடைகிறார். கர்போதகஷாயி விஷ்ணு பிரபஞ்சத்திற்குள் கிரகங்களைப் படைக்கின்றார். அந்த ஈரேழு லோகங்களின் மத்தியில் பூமி நிலைபெற்றுள்ளது. ஒட்டுமொத்த பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் பூமியானது மிகச்சிறிய தூசியைப் போன்றதாகும். இந்த தூசியில் ஏழு கண்டங்கள் உள்ளன.”
தமால கிருஷ்ணரின் கவனத்தை படத்தின் பக்கம் திருப்பிய பிரபுபாதர் தொடர்ந்து விளக்கினார், “இந்த ஏழு கண்டங்களில் ஒன்றில் அமெரிக்கா உள்ளது. அந்த அமெரிக்காவில் பல நகரங்கள் உள்ளன. அந்த நகரங்களில் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ். இந்த லாஸ் ஏஞ்சல்ஸில் பல இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் ஒன்று நமது கோயில். இந்த கோயிலில் தமால கிருஷ்ணர் என்று ஒருவர் உள்ளார். அவர் தன்னை மிகமிக முக்கியமானவராக நினைக்கின்றார்.”
இதை கேட்ட தமால கிருஷ்ணர் திடுக்கிட்டார். பிரபுபாதர் அவரைப் பார்த்து புன்னகைத்தார்.
சீடர்களின் கர்வத்தைப் போக்குவதற்காக ஸ்ரீல பிரபுபாதர் மேற்கொண்ட முயற்சிகள் அற்புதம். நாம் அற்பமானவர்கள் என்பதையும் அகந்தையைப் போக்க வேண்டும் என்பதையும் பிரபுபாதர் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்.
ஜய ல பிரபுபாத!!!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives