சமூகப் புரட்சி

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

தற்போதைய நவீன சமுதாயத்திற்கு மாற்று வழியாக, எளிய வாழ்வையும் உயர்ந்த சிந்தனையையும் கொண்ட சமுதாயத்தை அமைப்பது குறித்து, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர், ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார உறுப்பினர்கள் சிலருடன் நிகழ்த்திய உரையாடல்.

ஸ்ரீல பிரபுபாதர்: உலகெங்கிலும் நாங்கள் செய்வதைப் போல நீங்களும் சோதனை செய்து பாருங்கள். தன்னிறைவுடன் மிகவும் எளிமையாக வாழுங்கள். உங்களது இன்றியமையா தேவைகளை தொழிற்சாலைகளிலிருந்து பெறுவதை விட்டுவிட்டு, நிலங்களிலிருந்து பெறுங்கள். கடவுளின் திவ்ய நாமங்களை புகழ்ந்து பாடுங்கள்.

இந்த தொழில்மயமான உலகில்ஶீமுதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும் சரி, பொதுவுடைமையை ஆதரிப்பவர்களும் சரிஶீஒரு சில பெரிய மனிதர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும், அந்த பெயரளவிலான மகிழ்ச்சி மற்ற மக்களின் உழைப்பினால் வருகிறது. சிலர் சுரண்டுகின்றனர், சிலர் சுரண்டப்படுகின்றனர், சிலர் சீரழிகின்றனர், சிலர் எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே அமர்ந்திருக்கின்றனர்.

இன்றைய சமுதாயத்திற்கு ஒரே தீர்வு, ஒவ்வொருவரும் இயற்கையாக வாழ்ந்து, கடவுளின் திவ்ய நாமத்தை உச்சரிப்பதேயாகும். இது மிகவும் எளிதானதாகும், இதன் விளைவுகளை நீங்களே பாருங்கள். எனது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க இளம் மாணவர்கள், போதை மருந்து, குடிப்பழக்கம், புகைபிடித்தல் போன்ற பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமைகளாக இருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் எவ்வளவு நிதான புத்தியுடன் கடவுளின் திவ்ய நாமங்களை எந்த அளவிற்கு புகழ்ந்து பாடுகிறார்கள் என்பதைக் காணுங்கள்.

இந்த போதனையை நீங்கள் ஏற்றுக் கொண்டால், உலகத்தை மாற்றி அனைத்தையும் சரியாக திருத்தி அமைத்து விடலாம். இதைத் தவிர வேறு தீர்வு இல்லை.

ஐ.நா. உறுப்பினர்: கிராமத்திலிருந்து நகரத்திற்கு செல்லும் மக்களைப் பற்றி குறிப்பிட்டீர்கள். கிராம மக்கள் நகரத்திற்கு வந்து தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாகி விடுவதால், தீமைகள் தொடர்வதாகக் கூறினீர்கள்.

ஆனால் நம் நகரங்களிலும் கிராமங்களிலும் பெருமளவில் வேலையில்லா திண்டாட்டம் இருப்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். நிறைய மக்கள் சபிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவையே அவர்களால் உற்பத்தி செய்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில், அவர்களுக்கு நிலத்திற்குச் சென்று உழைக்கும் வாய்ப்பு இல்லை. நிலங்களை வியாபாரிகள் தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் பல சாதாரண மக்கள் வேலையில்லாமல் உள்ளனர், நகரங்களுக்குச் செல்கின்றனர். நகரத்தில் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என வசீகரிக்கப்பட்டு அவர்கள் வருவதில்லை, ஆனால் அவர்களால் நிலத்தை அணுக முடியவில்லை என்பதாலேயே நகரத்திற்கு வருகின்றனர். வர்த்தகப் பிரமுகர்களும் நிலத்தைப் பயன்படுத்துவது இல்லை. சாதாரண மக்கள் கிராமங்களில் சுதந்திரமாக வாழ்ந்து அவர்களுக்குத் தேவையான உணவினைப் பயிரிடவும் முடிவதில்லை.

தற்போதைய சூழ்நிலையில் வர்த்தகக் குழுவினர் மக்களை ஏய்த்து பிழைக்கின்றனர். ஒருவிதமான புரட்சியினால் வர்த்தகக் குழுவினரின் சக்திக்கு தடை விதித்தால் ஒழிய, மக்கள் கிராமங்களில் வாழ்ந்து தங்களின் உணவை விளைவிக்க முடியுமென எதிர்பார்க்க முடியாது.

ஸ்ரீல பிரபுபாதர்: உண்மை என்னவெனில், யாரும் வேலையின்றி இருக்கக் கூடாது என்பது அரசாங்கத்தின் கடமையாகும். அதுவே நல்ல அரசு. அரசாங்கத்தின் பணி அனைவருக்கும் பாதுகாப்பளித்து, வேறுபட்ட பிரிவினர் தத்தமது கடமைகளை செய்கிறார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கான சக்தி வாய்ந்த சத்திரியர்களைக் கொண்டு அரசு அமைக்கப்பட வேண்டும். அரசாங்கம் அனைவரும் முறையான வேலையில் இருக்கின்றனரா என கவனிக்க வேண்டும், அதன் பிறகு வேலையில்லா திண்டாட்டம் என்ற பிரச்சனை மொத்தமும் தீரும்.

உறுப்பினர்: ஆனால், தற்சமயத்தில் வணிகர்கள்கூட அரசாங்கத்தில் உள்ளனர். உண்மையில் அவர்கள் எங்கும் நுழைந்துவிட்டனர். அரசாங்கத்தில் அவர்களுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. பல சமயங்களில் அவர்கள் அரசாங்கத்தின் அதிகாரங்களுடன் செயல்படுகிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: கூடாது. அத்தகைய அரசாங்கம் மோசமானதாகும்.

உறுப்பினர்: ஆம். அஃது உண்மைதான்.

ஸ்ரீல பிரபுபாதர்: அரசாங்கத்தில் வணிகர்களின் தலையீடு இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், எவ்வாறு அரசாங்கத்தினால் பாரபட்சமின்றி அனைவரது வேலைவாய்ப்புக்காகவும் பாடுபட முடியும்?

அரசாங்கம், வணிகர்களின் புத்திக் கூர்மையை சுதந்திரமாக உபயோகப்படுத்த ஊக்குவிக்க வேண்டும், ஆனால் இயற்கைக்கு ஒவ்வாத, தோன்றி மறையக்கூடிய தொழிற்சாலைகளை உண்டாக்கி, வேலையில்லாத் திண்டாட்டம் விளைவதைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் ஒழுங்கான வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உறுப்பினர்: அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் புரட்சிகரமான இயக்கமாக வளர்ந்து இந்த சமூகத்தை சீர்திருத்தும் நாளை நான் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இது மக்களின் மனதில் புரட்சியைக் கொண்டு வரும் என நான் நினைக்கிறேன். ஏனெனில், அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் இதனை மானசீகமாக ஏற்கிறார்கள். நான் கிருஷ்ண பக்தியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். மிகவும் புத்திசாலிகளான அவர்கள் எல்லாவற்றையும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

நாங்கள் சில வருட காலமாகத்தான் இப்பணியைச் செய்து வருகிறோம். இருப்பினும், இந்த இயக்கத்தை உலகின் எல்லா பகுதிகளிலும் பரப்பியுள்ளோம். மக்கள் இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டால், இது தொடரும், பற்பல புரட்சிகளை உண்டாக்கும். ஏனெனில், நாங்கள் மனம்போன போக்கில், அல்லது தாறுமாறாக செயல்படுவதில்லை. நாங்கள் வேத சாஸ்திரங்களிலிருந்து அதிகாரபூர்வமான வழிகாட்டுதலை பெறுகிறோம். மக்கள் இந்த புத்தகங்களைப் படிப்பதால் எல்லா தகவல்களையும் பெறலாம். அவர்கள் அதனை தீவிரமாக எடுத்துக் கொண்டால், அது புரட்சியை உண்டாக்கும்.

உறுப்பினர்: அப்படியாயின் உங்கள் இயக்கம் சமுதாய தத்துவத்தில் ஈடுபடுகிறதா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இந்த இயக்கம் மிகவும் செயல்முறையானது. உதாரணமாக, நாங்கள் மாமிசம் சாப்பிடுவதை பரிந்துரைப்பதில்லை. ஆகவே தலைவர்கள் எங்களை விரும்புவதில்லை. அவர்கள் மாமிசக் கிடங்குகளையும் மாட்டிறைச்சிக் கடைகளையும் எல்லா இடங்களிலும் அனுமதிக்கிறார்கள், ஆனால் நாங்கள் மாமிசம் உட்கொள்ளாதீர்கள் என போதிக்கிறோம். அதனால் அவர்கள் எப்படி எங்களை விரும்புவார்கள்? இதுவே கஷ்டம். அறியாமையைப் பேரின்பமாகக் கருதுபவர்களிடம், புத்திசாலித்தனத்தைப் பற்றிப் பேசுவது அறிவீனமாகும். இருந்தும் முயற்சிக்கிறோம்.

நாங்கள் பரிந்துரைக்கும் வழிமுறை மிகவும் எளிதானது. கடவுள் உணர்வு கொண்ட விவசாய கிராமங்கள் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அக்கிராமங்களில் உள்ளவர்கள் வாழ்க்கையை நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் உணர்கின்றனர். இயற்கை தனது தயாள குணத்தினால், பழங்கள், காய்கறிகள், தானியம் ஆகியவற்றை வெகுவாக அளிக்கிறது. மேலும், பசு பாலைத் தருகிறது. அதிலிருந்து வெண்ணெய், பாலாடைக் கட்டி, தயிர், பாலேடு ஆகியவை கிடைக்கும். இந்த அனைத்து பொருட்களினால் நீங்கள் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சுவையான உணவு வகைகளைத் தயாரிக்கலாம். மேலும் நீங்கள் முழுமையான திருப்தி அடையலாம். இதுவே அடிப்படைக் கொள்கை.

மக்கள் அலுவலகத்திற்கும் தொழிற்சாலைக்கும் கார்களில் போய் வருவதால், நெடுஞ்சாலை விபத்துகளில் இறக்கும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, ஒருவன் எதற்காக வீட்டிலிருந்து பல மைல்கள் தூரம் பயணம் செய்து வாழ்வதற்கான ஊதியம் பெற வேண்டும்? இது மிக மோசமான நாகரிகம். உள்ளூரிலேயே உணவை அடைய வேண்டும். அதுதான் நல்ல நாகரிகம்.

உறுப்பினர்: உணவைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் தன்னிறைவு கொள்ள வேண்டுமென்பதுதான் உங்கள் குறிக்கோள் என புரிந்துகொள்கிறேன். ஆனால் எல்லா மக்களும் உணவு தயாரிப்பதிலேயே ஈடுபட்டால் மற்றவற்றை யார் நமக்குத் தருவார்கள்?

ஸ்ரீல பிரபுபாதர்: அனைவரும் உணவு உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. அனைவரும் விவசாயிகளாக இருப்பார்கள் என்பதல்ல. அறிவாளிகள் பிரிவு, நிர்வாகிகள் பிரிவு, உழைப்பாளிகள் பிரிவு ஆகியவையும் அவசியம். எந்த ஒரு சமுதாயத்திலும் இந்த பிரிவுகள் இயற்கையாகவே உள்ளன. மேலும், ஆன்மீகத்தை வளர்ப்பதற்காக அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

 

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives