—பிரபுபாதர் தாமே வழங்கிய சொற்பொழிவிலிருந்து
“வாருங்கள், தியேட்டரில் நல்ல திரைப்படம் ஓடுகிறது,” என்று எங்களது மாணவர்களிடம், கிருஷ்ண உணர்வைப் பெற்றுள்ளவரிடம் யாரேனும் அழைத்தால், அவர் ஒருபோதும் செல்ல மாட்டார். அவர் ஒருபோதும் செல்ல மாட்டார்; ஏனெனில், அவர் அன்னப் பறவையாகி விட்டார், அவர் காகமாக இருக்கவில்லை. காகமாக இருந்தால் மட்டுமே அத்தகு இடத்திற்குச் செல்வர். அங்கே என்ன இருக்கிறது? அன்னம் போன்றவர்கள் அத்தகு இடங்களை நிராகரிக்கின்றனர், தத் வாயஸம் தீர்தம் உஷந்தி மானஸ: ந யத்ர ஹம்ஸ நிரமந்த்யுஸிக்-க்ஷய: (ஸ்ரீமத் பாகவதம் 1.5.10)
என்னுடைய வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறதது, அப்போது நான் கிருஹஸ்த வாழ்வில் இருந்தேன். குடும்பத்துடன் சினிமாவிற்குச் சென்று கொண்டிருந்த என்னுடைய நண்பர்களில் ஒருவன் தெருவில் என்னைப் பார்த்தான். அவன் உடனடியாக அவனது காரை நிறுத்தி என்னிடம் கூறினான், “நாங்கள் சினிமாவிற்குப் போகிறோம், நீயும் வா.” நானோ மறுத்தேன், “நீ ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், நான் சினிமாவிற்கு வர மாட்டேன்.”
இருந்தும், அவன் என்னை பலவந்தமாக இழுத்துச் சென்றான். அவன் என்னை சினிமா தியேட்டருக்கு அழைத்துச் சென்றான், ஆனால் நான் உள்ளே நுழையவே இல்லை, நான் திரும்பி விட்டேன். பாருங்கள்! ஏனெனில், அது சுவையற்ற செயல்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!
மூலம்: ஜுன் 6, 1969 அன்று நியு விருந்தாவனத்தில் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய பாகவத சொற்பொழிவு