நாம் எவ்வளவு பெரிய முட்டாள்கள்!

Must read

தலைசிறந்த பக்தர்களும் கிருஷ்ணரின் உறவினர்களுமான பாண்டவர்கள் தங்களது வாழ்வில் பல்வேறு துயரங்களை சந்தித்தனர்.

உலகமே போற்றிய உத்தம அரசர் பரீக்ஷித்தை சிருங்கி என்ற சிறுவன் சபித்தான்.

தலைசிறந்த வைஷ்ணவரான சிவபெருமானை தக்ஷன் சபித்தான்.

பார்ப்பவர் அனைவரையும் வைஷ்ணவராக மாற்றும் நாரதருக்கும் தக்ஷனின் சாபம் கிட்டியது.

தன்னில் திருப்தியுற்று பக்திப் பரவசத்துடன் நாடெங்கும் உலாவிய சுகதேவ கோஸ்வாமியையும் ரிஷப தேவரையும் மக்கள் பல வழிகளில் கேலியும் கிண்டலும் செய்து தவறாக நடத்தினர்.

உலக வாழ்வின் தொடர்பை முற்றிலும் துறந்து வாழ்ந்த ஜட பரதரை மற்றவர்கள் ஏய்த்து பிழைத்தனர், சிலர் அவரை காளிக்கு பலிகொடுக்கவும் துணிந்தனர்.

வைஷ்ணவத்தைப் பரப்பிய தலைசிறந்த ஆச்சாரியரான இராமானுஜர் சோழ நாட்டை விட்டு வெளியேற நேரிட்டது.

கௌடீய வைஷ்ணவத்தை ஆணித்தரமாக நிலைநாட்டிய சிங்கம் போன்ற ஆச்சாரியரான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூருக்கு எதிராக கொலை முயற்சி நடந்தது.

பிரகலாதர் சொல்லவியலா துன்பங்களை தமது தந்தையின் மூலமாகவே அனுபவித்தார்.

இவ்வாறு உயர்ந்த நிலையிலுள்ள பக்தர்கள்கூட சில சமயங்களில் சபிக்கப்படுகின்றனர், கேலி செய்யப்படுகின்றனர், அவமதிக்கப்படுகின்றனர், ஏய்க்கப்படுகின்றனர், விரட்டப்படுகின்றனர், தண்டிக்கப்படுகின்றனர்.

ஆயினும், நாமோ, மதிப்பு, மரியாதை, புகழ்ச்சி, பெருமை, வெற்றி, மலர்கள் நிறைந்த பாதை என பலவற்றை எதிர்பார்க்கின்றோம்; நாம் எவ்வளவு பெரிய முட்டாள்கள்!

மேற்கூறிய பக்தர்களை பகவான் எல்லாச் சூழ்நிலையிலும் எவ்வாறு பாதுகாத்தாரோ, அவ்வாறே நாமும் அவரது பாதுகாப்பினை விரும்புகிறோம். ஆனால், அவர்களது இன்னல்களில் நாம் சிறிதளவுகூட பொறுத்துக்கொள்ள மறுப்பது ஏன்? மான அவமானத்தையும் வெற்றி தோல்வியையும் மேற்கூறிய பக்தர்களைப் போல சகித்துக் கொண்டால், நமது ஆன்மீக வாழ்வு வெற்றியடையும்.

ஆன்மீக வாழ்வு என்றால், பௌதிக வளத்துடன் வாழ்வது என்றோ இன்னல்கள் இன்றி வாழ்வது என்றோ நாம் நினைத்து விடக் கூடாது; மாறாக, எதார்த்த வாழ்வு என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொள்வதற்கான அறிவை அந்த பரந்தாமனிடமே வேண்டுவோம்.

அந்த உண்மை நிலையில் ஆன்மீக வாழ்வைப் பயின்று ஆன்மீக இன்பத்தில் திளைப்போமாக.

(திரு. விக்ரம கோவிந்த தாஸ் அவர்களுடைய குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives