—அக்டோபர் 2, 1972, இஸ்கான் லாஸ் ஏஞ்சல்ஸ்
ஒரு நாள் ஸ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த தமது அறையில் மனோவியல் மருத்துவர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். பக்தர்கள் தங்களது சேவைகளை ஏற்கும்படி பொதுமக்களை பலவந்தப்படுத்துவதாக அந்த மருத்துவர் குற்றம் சாட்டினார். ஸ்ரீல பிரபுபாதர் உடனடியாகச் சுட்டிக் காட்டினார், “அப்படியெனில், பக்தர்கள் உங்களைவிடச் சிறந்தவர்களே.”
பிரபுபாதர் மேலும் கூறினார், “பக்தர்கள் மக்களை நேரடியாக அணுகி, தங்களது சேவையை அனைவருக்கும் இலவசமாக வழங்குகின்றனர். ஆனால் மனோவியல் மருத்துவர்களோ மக்களை தங்களிடம் வரச் சொல்லி, அவர்களிடமிருந்து பணமும் வாங்குகின்றனர். இதனால், பக்தர்கள் மனோவியல் மருத்துவரைக் காட்டிலும் சிறந்தவர்களாவர்.” மருத்துவர் வாயடைத்துப் போனார்.
ஸ்ரீல பிரபுபாதர் எதையும் யாரிடமிருந்தும் வாங்குவதில் ஆர்வமற்றவராக உள்ளார் என்பதை மனோவியல் மருத்துவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரது ஒரே விருப்பம் தாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் கிருஷ்ணரை வழங்குவது மட்டுமே. பிரபுபாதர் பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினை மற்றவர்களுக்கு வழங்கினார். பக்தியே மிகவுயர்ந்த சமூகநலப் பணி என்பதால், நமது நலனை என்றும் விரும்புபவர் அவரே.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!