ஒரே கையில் இரண்டு கடிகாரங்கள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

சீடர்களின் பக்தி சேவை கிருஷ்ணரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக, ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்கள் அளிக்கின்ற பொருத்தமற்ற அன்பளிப்புகளைக்கூட ஏற்று பயன்படுத்துவது வழக்கம். இதனை பக்தர்கள் எளிதாகப் புரிந்து கொண்டு மகிழ்கின்றனர். சில நேரங்களில், அவரையோ அவரது புகைப்படத்தையோ பக்தியற்ற கண்களினால் பார்க்கின்ற அபக்தர்கள், ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களிடமிருந்து ஜட வசதிகளைப் பெற்று அனுபவிக்கின்றார் என்று எண்ணலாம். குறிப்பாக, அவர் அணிகின்ற பல மோதிரங்களையும் தங்கக் கடிகாரங்களையும் கண்டு பக்தரல்லாதோர் ஸ்ரீல பிரபுபாதரை ஏளனம் செய்கின்றனர்.

ஒருமுறை ஸ்ரீல பிரபுபாதர் இரண்டு அல்லது மூன்று மோதிரங்களை அணிந்திருந்தார், அதில் ஒன்று பள்ளிக் குழந்தைகள் அணியக்கூடிய விலைகுறைவான மோதிரம். அன்பளிப்பு கொடுத்ததை ஆமோதிக்கும்விதமாக அவர் அதையும் சில காலம் அணிந்திருந்தார். மாஸ் மார்க்கெட் டெக்னாலஜி என்ற நிறுவனம் முதல்முறையாக டிஜிட்டல் கைக்கடிகாரங்களை தயாரித்தபோது, அதில் ஒன்றினை சியாமசுந்தர தாஸ் அவர்கள் ஸ்ரீல பிரபுபாதருக்கு அன்பளிப்பாக அளித்தார். அஃது ஆடம்பரமான ஒன்றாகக் கருதப்பட்டது. உண்மையில், அக்கடிகாரம் செயல்படவே இல்லை. இருப்பினும், பிரபுபாதரும் அதனை தனது பெட்டியிலேயே சில காலம் எடுத்துச் சென்றார், பின்னர் யாருக்கோ வழங்கி விட்டார்.

அன்பளிப்புகளைப் பெற்று சில காலம் பயன்படுத்திய (அல்லது வைத்திருந்த) பின்னர், அவற்றை சீடர் எவருக்கேனும் அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவது ஸ்ரீல பிரபுபாதரின் வழக்கமான பாணியாகும். இன்றும்கூட சில அதிர்ஷ்டசாலி சீடர்கள் பிரபுபாதர் வழங்கிய அந்த பொக்கிஷத்தைப் பாதுகாத்து வருகின்றனர். சில நேரங்களில் ஸ்ரீல பிரபுபாதர் அன்பளிப்புகளை உடனடியாக மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுவார், அப்போது அதனை அளித்தவர் சிறிது ஏமாற்றமடைவார். உதாரணமாக, பூரிஜன பிரபு அவர்கள் ஒருமுறை தங்க தகடு பதித்த கனமான காப்பினை பிரபுபாதர் ஹாங்காங் வந்திருந்தபோது அன்பளிப்பாக அளித்தார். குறுகிய நேரத்திலேயே பிரபுபாதர் அந்த காப்பினை தமது சீடரான பகவான் கோஸ்வாமிக்கு அளித்துவிட்டார். அதனால் பூரிஜன பிரபு முதலில் ஏமாற்றமடைந்தார். இறுதியில், பக்தர்களின் மீதான ஸ்ரீல பிரபுபாதரின் கருணையை அவரால் பார்க்க முடிந்தது.

எனவே, பிரபுபாதரின் துறவற மனப்பான்மையையும் அவரது சீடர்களுடனான அன்பு பரிமாற்றங்களையும் ஒருவர் புரிந்துகொள்ளவில்லை என்றால், பிரபுபாதர் அணியும் மோதிரங்களோ தங்க அணிகலன்களோ தவறாகப் புரிந்துகொள்ளப்படும். அந்த அபாயம் இருப்பதை பிரபுபாதர் அறிந்திருந்தும், கிருஷ்ணரின் பிரதிநிதியாக அந்த அன்பளிப்புகளை ஏற்பதிலும் அவற்றினை கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்துவதிலும் உள்ள முக்கியத்துவத்தினால், அவர் பெரும்பாலும் அவற்றை ஏற்றார்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives