—ஜஷோமதி நந்தன தாஸரின் பேட்டியிலிருந்து
மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த பிரபல சாதுவான தங்கரி மஹாராஜரைப் பற்றி பிரபுபாதரிடம் வினவினேன். தங்கரி மஹாராஜர் அச்சமயத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பாகவத சொற்பொழிவாளராக இருந்தார். பாகவதத்தை எடுத்துரைக்கும்போது அவரது கண்களில் கண்ணீர் பெருகும், கேட்பவர்களும் கண்ணீர் சிந்துவர்.
பிரபுபாதர் கூறினார், “எனக்கு அவரைப் பற்றி தெரியாது. அவர் எவ்வாறு பிரச்சாரம் செய்கிறார்?”
நான் கூறினேன், “அவர் கிருஷ்ண லீலைகளைப் பற்றி பேசுகிறார்; ஆயினும், ‘நீங்கள் யாரை நம்புகிறீர்களோ அவரை வழிபடலாம்,’ என்றும் கூறுகிறார். ஓம் நமசிவாய, ஓம் துர்காய நம: என பல மந்திரங்களை அவர் பரிந்துரைக்கிறார். ஆயினும், அவரது சொற்பொழிவில் பெரும்பாலும் அவர் ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே/ ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே என்றுதான் கீர்த்தனம் செய்கிறார்.”
பிரபுபாதர் கூறினார், “கிருஷ்ணரின் பெயரும் தேவர்களின் பெயரும் ஒன்று என்று அவர் எண்ணினால், அவர் தங்கரி அல்ல, தாங்கரி.” தாங்கரி என்றால் ஏமாற்றுக்காரர் என்று பொருள். பிரபுபாதர் தொடர்ந்தார், “வைஷ்ணவன் ஒருபோதும் கிருஷ்ணரின் திருநாமத்தை வேறு எதற்கும் சமமானதாகக் கூற மாட்டான்.”
ஒரு நபரை அவரது தோற்றம், பெயர், பதவி அல்லது அவரது கண்ணீரைக் கொண்டு பிரபுபாதர் எடை போடவில்லை; மாறாக, அந்த நபரின் தத்துவத்தைக் கொண்டே கணித்தார்.
ஜய ஸ்ரீல பிரபுபாதர்