வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்
கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் எனும் கொடிய தொற்றுநோய் உலக மக்கள் அனைவரையும் பீதியில் அலற வைத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்து வெளியிடப்பட்டு இந்தியா உட்பட பல நாடுகளில் ஏராளமான மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. போலியோ, பெரியம்மை போன்ற வைரஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்து வெளிவர பல ஆண்டுகள் பிடித்தன என்பதும், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணத்தால் சில மாதங்களுக்குள் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்துள்ளன என்பதும் வரலாற்று உண்மையே.
பல நாடுகளில் ஆண்டுதோறும் influenza அல்லது ஃபுளூ காய்ச்சல் வராமல் தடுக்க மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். ஆக, தடுப்பூசி என்ன மாயம் புரிகின்றது? எந்த நோயும் வராமல் தடுக்கும் மருந்து ஏதேனும் கண்டுபிடித்தால் நன்றாக இருக்குமல்லவா? இதைக் குறித்து பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களில் ஏதேனும் தீர்வு உண்டா என்பதைச் சற்று அலசி பார்ப்போமே.
தடுப்பூசி எவ்வாறு இயங்குகிறது?