ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் வழங்கிய உபதேச கதை
கருத்து
பகவானுக்கு பக்தித் தொண்டு ஆற்றுவதாக பாசாங்கு செய்து கொண்டு, மனதில் வேறு நோக்கங்களை வளப்பவர்கள், உண்மையான சாதுக்கள் மற்றும் வைஷ்ணவர்களின் முன்னிலையில் தவறாமல் அம்பலப்படுத்தப்படுவர். தனது சொந்தச் செயல்களை அபரிமிதமாகப் புகழ்ந்து பேசுவோர் அல்லது தனது நற்குண சாயலை நிரூபிப்பதற்காக பிறரைத் தூற்றுவோரின் மனதில் வேற்று நோக்கங்கள் உள்ளன என்பதை நாம் கச்சிதமாக யூகிக்கலாம்.
அவதூறு பேசுவோர் ஒன்றுகூடி ஓர் உண்மையான சாதுவை விமர்சிக்கும்போது, சுயநல நோக்கம் கொண்ட மனிதர்கள் பலர் தன்னைத் தூற்றினாலும் அந்த சாது ஒருபோதும் தன்னிலையை நிரூபிக்க முயற்சிக்க மாட்டார். உண்மையான வைஷ்ணவர் தனக்கேற்பட்ட எந்தவித விமர்சனத்தையும் எதிர்க்க மாட்டார், அனால் பிற வைஷ்ணவர் அல்லது ஆன்மீக குருவின் மீதான விமர்சனத்தை ஒருபோதும் பொறுக்க மாட்டார்.
தன் மீதான விமர்சனத்தை எதிர்த்து தன்னை நிரூபிக்க முயல்பவர், உண்மையில் தவறு புரிந்தவராகவே இருப்பார் அல்லது சமுதாயத்தில் பெயர், புகழை அடைய விரும்புபவராக இருப்பார்.