இந்த மாதம்: ஸ்ரீமத் பாகவதம், பத்தாவது ஸ்கந்தம் கேள்விகள்
(1) ஏழு நாளில் மரணத்தை சந்திக்க இருந்த பரீக்ஷித் மஹாராஜன் பகவானைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலில் எவற்றை பொருட்படுத்தவில்லை?
(2) பூமாதேவி எந்த உருவத்தை ஏற்று பிரம்மதேவரை அணுகினாள்?
(3) பிரம்மதேவர் எந்த வேத மந்திரத்தால் பாற்கடலில் வசிக்கும் விஷ்ணுவைத் துதித்தார்?
(4) பகவான் விஷ்ணு தேவர்களுக்கும் அவர்களது துணைவியர்களுக்கும் என்ன கட்டளை கொடுத்தார்?
(5) கிருஷ்ணர் காளியனை தண்டிக்க யமுனையில் எதிலிருந்து குதித்தார்?
(6) பிராமணர்களது மனைவியர்கள் காதில் எதை ஆபரணமாக அணிந்தனர் என சுகதேவ கோஸ்வாமி குறிப்பிடுகிறார்?
(7) பிரிவுத்துயரை அனுபவித்து வந்த கோபியர்களுக்கு கிருஷ்ணரின் செய்தியை வழங்க வந்தவர் யார்?
(8) ஸ்யமந்தக மணியைத் தேட கிருஷ்ணர் தாமே சுயமாகச் செல்ல காரணம் என்ன?
(9) பலராமர் ருக்மியை எங்கே கொன்றார்?
(10) கிருஷ்ணரைப் போல வேடமிட்டு ஏமாற்றியவன் யார்?
(விடைகள்)
(1) உணவையும் நீரையும்கூட பொருட்படுத்தவில்லை.
(2) பசுவின் உருவம்
(3) புருஷ-ஸூக்தம்
(4) யது வம்சத்தில் தோன்றும்படி கட்டளையிட்டார்.
(5) கதம்ப மரத்தின் மேலிருந்து குதித்தார்
(6) கிருஷ்ணரின் புகழ்
(7) உத்தவர்
(8) கிருஷ்ணர் பிரசேனனைக் கொன்று ஸ்யமந்தக மணியைத் திருடிவிட்டார் எனும் வதந்தியைத் தவறு என நிரூபிப்பதற்காகச் சென்றார்.
(9) அநிருத்தருடைய திருமணத்தின்போது கொன்றார்.
(10) பௌண்டரகன்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…