இரண்டாம் உலகப் போரின் ஒரு காலக் கட்டத்தில், ஆங்கிலேயர்கள் உணவுப் பொருட்களைத் தாங்கிய படகுகளை மூழ்கடித்தனர், பல்வேறு நெல் வயல்களை அழித்தனர்-எதிரிகள் அவற்றைக் கைப்பற்றி விடக் கூடாது என்று பயந்தனர். இது வங்காளத்தில் ஒரு மாபெரும் பஞ்சத்திற்கு வழிவகுத்தது. அதனால் கல்கத்தாவில் அபயின் தொழில் பாதிக்கப்பட்டது. லக்னோவில் ஒரு பெரிய தொழிற்சாலையை நிறுவ முயற்சித்தார், அதுவும் தோல்வியில் முடிந்தது. பல்வேறு வருடங்களுக்கு முன்பு அலகாபாத்தில் பிரயாக் ஃபார்மஸி” என்னும் மருந்துக் கடையை அபய் நிறுவியிருந்தார்-மீண்டும் அதே பணிக்கு திரும்பினார்.