AUTHOR NAME

Gita Govinda Dasi

15 POSTS
0 COMMENTS
திருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

அகிஞ்சன மனநிலை

எந்தச் செல்வமும் தன்னுடையதல்ல என்ற உணர்வுடன், கிருஷ்ணரைத் தவிர தனக்கென்று யாரும் கிடையாது, எதுவும் கிடையாது என்பதை உணர்ந்து, அவரை அணுகும் மனநிலை. வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி எறும்பு முதல் பிரம்மதேவர் வரை இந்த...

பழிக்குப் பழி

மனிதர்களிடையே தங்களுக்கு தீங்கு இழைத்தவர்களை பழி வாங்கும் குணம் இருக்கிறது. ஒரு சிறிய நிகழ்வு தொடர் நிகழ்வுகளாகி பேரழிவை ஏற்படுத்தியதை வரலாற்றில் கேள்விப்பட்டுள்ளோம். யாராவது நம்மை அவதூறாகப் பேசினாலோ தவறாக நடத்தினாலோ அவர்களை எப்படி பழி வாங்கலாம் என்பதிலேயே மனம் குறியாக இருக்கிறது. ஆனால் இதிகாச வரலாற்றில் பக்தர்கள் எதிர்மறையான நிகழ்வுகளை எவ்வாறு சந்தித்தனர், தங்களுக்கு தீங்கு செய்தவர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

அழகும் அகோரமும்

ஸ்ரீமத் பாகவதம் மூன்றாவது ஸ்கந்தத்தில் ஸ்வாயம்புவ மனுவின் புதல்வியான தேவஹூதியின் சரித்திரம் விவரிக்கப்பட்டுள்ளது. அவள் பேரழகு வாய்ந்த இளம்பெண். ஒருமுறை அவள் தனது அரண்மனையின் மாடத்தில் பந்து விளையாடியதைப் பார்த்த விஸ்வாவஸு என்ற கந்தர்வன் அவளது அழகில் மயங்கி விமானத்திலிருந்து கீழே விழுந்தான். கந்தர்வனையே மயக்கும் அழகுடையவள் அவள். அதே சமயத்தில், அவள் கற்பில் மிகச்சிறந்தவளாக இருந்தாள். அவள் நாரத முனிவருடைய ஆலோசனையின்படி, பக்தியில் சிறந்த கர்தம முனிவருக்கு தன் மனதைக் கொடுத்தாள்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல அசம்பாவிதங்களையும் துயரங்களையும் ஏமாற்றங்களையும் ஆபத்துகளையும் அநீதிகளையும் சந்திக்கின்றான். நேர்மையாக வாழ்ந்தும் பலனில்லாமல் போய்விட்டதே? இத்தகு கஷ்டங்கள் எனக்கு மட்டும் ஏன் நிகழ்கின்றன? துயரங்களுக்கான காரணம் என்ன? அநியாயங்களை தட்டிக்கேட்பார் யாரும் இல்லையா? என பல வினாக்கள் மனதில் எழுகின்றன.

ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் அவதரிப்பதற்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயதேவர் 12ஆம் நூற்றாண்டில் போஜதேவருக்கும் ரமாதேவிக்கும் நன்மகனாகத் தோன்றினார். இவரது பிறப்பிடம் வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்திலுள்ள கெந்துபில்வா என்று சிலர் கூறுகின்றனர், வேறு சிலரோ ஒடிஸாவிலுள்ள கெந்துளி சாசன் என்று கூறுகின்றனர். ஜெயதேவரின் பிறப்பிடம் குறித்து ஒடியர்களுக்கும் வங்காளர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்றும்கூட அறிஞர்களிடையே இதுகுறித்து அபிப்பிராய பேதம் காணப்படுகிறது.

Latest