AUTHOR NAME

Sri Giridhari Das

121 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

ஸ்ரீல ரூப கோஸ்வாமி :

கலி யுகத்தின் தர்மமான ஹரிநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களான அனைவரையும் விடுவிக்கும் திருப்பணியில் அவர் தன்னுடைய அந்தரங்க சேவகர்கள் பலரையும் ஈடுபடுத்தினார். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி. கௌடீய சம்பிரதாயம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடமிருந்து தொடங்குகிறது, அவர் மாபெரும் பண்டிதராகத் திகழ்ந்தார் என்றபோதிலும், சிக்ஷாஷ்டகம் என்னும் எட்டு பாடல்களைத் தவிர அவர் வேறு எதையும் எழுதவில்லை. ஸம்பிரதாயத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான எழுத்துப் பணியினை அவர் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளிடம் ஒப்படைத்தார். அதிலும் குறிப்பாக, ரூப கோஸ்வாமிக்கும் ஸநாதன கோஸ்வாமிக்கும் அப்பணி ஒப்படைக்கப்பட்டது. எனவே, கௌடீய சம்பிரதாயத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ள போதிலும் ரூப கோஸ்வாமியைப் பின்பற்றுபவர்கள் ரூபானுகர்கள் என்று அழைக்கப்பட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை அடைகின்றதா?

பகவத் கீதையில் கர்ம யோகம், ஞான யோகம், ஸாங்கிய யோகம், அஷ்டாங்க யோகம், பக்தி யோகம் என பல்வேறு யோக முறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த யோக முறைகளில் பக்தி யோகமே உன்னதமானது என்றும், மற்ற யோகங்கள் பக்தி யோகத்திற்கான படிக்கட்டுகள் என்றும் கீதை விளக்குகின்றது.

மஹாராஷ்டிரா வறட்சிக்கும் சனி தேவருக்கும் தொடர்பு உண்டா?

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள சனி தேவரின் கோயிலில் தொன்றுதொட்டு வரும் வழக்கத்தின்படி, பெண்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அதற்கான அனுமதி வேண்டும் என்ற "உரிமைப் போராட்டம் சமீப காலத்தில் வலுவாக தோன்றியது....

மக்களாட்சி-பிரச்சனைகளும் தீர்வுகளும்

"மக்களால் மக்களுக்காக" என்று கூறப்படும் மக்களாட்சியின் முக்கிய அங்கம் தேர்தல். தற்போது தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் அனைத்து மக்களும் தேர்தல் செய்திகளை மிகமிக ஆர்வமாக படித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருவாயில், ஆன்மீக இதழில் தேர்தல் பற்றிய கட்டுரையா என்று சிலர்

ஸ்ரீ மாதவேந்திர புரி

ஸ்ரீ மாதவேந்திர புரி அவர்கள் ஸ்ரீ மத்வாசாரியரின் பரம்பரையில் வந்த மாபெரும் ஆச்சாரியர்களில் ஒருவர். ஸ்ரீ ஈஸ்வர புரியும் ஸ்ரீ அத்வைத ஆச்சாரியரும் இவருடைய இரண்டு முக்கிய சீடர்கள். பகவான் ஸ்ரீ சைதன்ய...

Latest