AUTHOR NAME

Sri Giridhari Das

121 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

ஹரியும் சிவனும் ஒன்றா? அறியாதவன் வாயில் மண்ணா?

சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் இடையிலான அபிப்பிராய பேதங்களும் சண்டை சச்சரவுகளும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சிலர் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றும், வேறு சிலர் விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்றும் கூறி, சிவனையும் விஷ்ணுவையும் வெவ்வேறு துருவங்களாக வழிபடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில், ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு” என்று கூறி, இருவரையும் சமாதானப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களின் வாதங்கள் ஒருபுறம் இருக்க, சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களிடம் உள்ள தவறான கருத்துகளை தெளிவுபடுத்தும் இந்த ஞானவாள் பகுதியில், இதனைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம்

கிருஷ்ணர் ஏன் கோபியர்களுடன் நடனமாடினார்? அவர் ஏன் எப்போதும் கோபியர்களுடன் காட்சியளிக்கிறார்? போன்ற கேள்விகள் பல்வேறு கோணங்களில் நேற்று, இன்று, நாளை என்று என்றென்றும் எழும் கேள்விகள். சாஸ்திரங்களும் பல்வேறு ஆச்சாரியர்களும் இதற்கு வழங்கியுள்ள பதில்கள் புத்திக்கூர்மையுள்ள அனைவரையும் திருப்திப்படுத்துபவை.

யுதிஷ்டிரர் கூறிய பொய்

மகாபாரதத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று, துரோணரின் மரணம். அஸ்வத்தாமன் மரணமடைந்து விட்டதாக யுதிஷ்டிரர் கூறிய பொய் அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. யுதிஷ்டிரர் பொய் பேசியதற்கு கிருஷ்ணரே காரணம் என்று கூறி கிருஷ்ணரையும் யுதிஷ்டிரரையும் பற்றி அவதூறாக பேசுவோர் பலர். இதுகுறித்த சில தகவல்கள் இங்கே அலசப்பட்டுள்ளன.

பகவத் கீதை வயதானவர்களுக்கா?

பகவத் கீதை என்ற பெயரைக் கேட்டதும் பெரும்பாலானோர் கூறும் பொதுவான பதில்: இதெல்லாம் எங்களுக்கு இப்போதைக்கு வேண்டாம், வயதான பிறகு பார்க்கலாம் என்பதே. ஆனால் வயதானவர்களால் பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முடியுமா? கீதைக்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்? காலந்தாழ்த்துவதால் வரும் விளைவுகள் யாவை? இவற்றை இங்கே சற்று அலசிப் பார்ப்போம்.

மாடு மேய்த்தல் கேவலமா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் நான் சிறுவனாக இருந்த காலத்திலும் சரி, தற்போதைய காலத்திலும் சரி, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் கூறும் ஒரு பொதுவான வாக்கியம்: “நன்றாக படி, இல்லையெனில் மாடு மேய்க்க வேண்டியதுதான்."...

Latest