AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

226 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

குற்றமற்ற அறிவைப் பெற டார்வினை நம்புவதா? கிருஷ்ணரை நம்புவதா?

குற்றமற்ற, பக்குவமான அறிவைப் பெற விரும்பும் மக்கள் மன அனுமானத்தினால் உருவான டார்வின் போன்ற விஞ்ஞானிகளை ஏற்பதற்கு பதிலாக, குற்றமற்ற நபரிடமிருந்து குற்றமற்ற அறிவைப் பெற வேண்டும் என்பதுகுறித்து ஸ்ரீல பிரபுபாதர் மானுடவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் கேரோல் கெமெரோனுடன் உரையாடுகிறார். ஸ்ரீல பிரபுபாதர்: நமது வாழ்நாள் எழுபது அல்லது எண்பது வருடங்களே. இருந்தும்கூட டார்வினுடைய கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான ஆண்டுகளைக் கணக்கிடுகின்றனர்.

கடவுளை நாங்கள் வழங்குகிறோம், ஏற்பதற்கு ஏன் தயக்கம்?

இறை விஞ்ஞானத்தினைத் தேடுவோர் அதனை ஒரு வரம்பிற்குள் தேடுவதைப் பற்றியும், பகவத் கீதை முதலிய வேத சாஸ்திரங்களை இந்துக்களுடையது என்று கருதி குறுகிய மனப்பான்மையுடன் அவற்றைப் புறக்கணிப்பதைப் பற்றியும், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி...

பற்றுதல் எனும் யோகம்

பல்வேறு யோக முறைகளுக்கு ஏற்ப பல வகையான யோகிகள் உள்ளனர். யோகம் என்பது செயல் முறையைக் குறிக்கிறது. யோக முறையைப் பயிற்சி செய்பவன் யோகி எனப்படுகிறான். யோகத்தின் நோக்கம் கிருஷ்ணரை அறிவதே என்பதால், கிருஷ்ண உணர்வே மிகவுயர்ந்த யோக முறையாகும். இந்த யோக முறையை பகவான் கிருஷ்ணர் தமது நெருங்கிய நண்பனான அர்ஜுனனுக்கு விளக்குகிறார். கிருஷ்ணர் தமது விளக்கத்தின் ஆரம்பத்தில் கூறுகிறார், “என்னிடம் பற்றுதல் கொண்ட நபரால் இந்த யோக முறையைப் பயிற்சி செய்ய முடியும்.” எனவே, கிருஷ்ணரிடம் பற்றில்லாத சாதாரண மனிதனால் இந்த மிகவுயர்ந்த யோக முறையைப் பயில இயலாது என்பது தெளிவாகிறது. கிருஷ்ணரிடம் பற்றுதல் இல்லாத யோகி வேறு விதமான யோக முறையைப் பயில்கிறான்.

வேத ஞானமெனும் மரத்தின் கனிந்த பழம்

ஸ்ரீமத் பாகவதம் வேத இலக்கியங்களின் கனிந்த பழமாகும். வேத இலக்கியம் கற்பக மரத்துடன் (கல்ப–தருவுடன்) ஒப்பிடப்படுகின்றது. கல்ப என்றால் “விருப்பம்” என்றும், தரு என்றால் “மரம்” என்றும் பொருள். பௌதிக உலகில் வாழும் நமக்கு கல்ப–தருவைப் பற்றிய அனுபவம் ஏதும் இல்லை; கல்ப–தருவானது ஆன்மீக உலகமான கிருஷ்ண லோகத்தில் காணப்படக்கூடியதாகும். பௌதிக உலகில் மாமரத்திலிருந்து மாம்பழங்களை மட்டுமே பெற முடியும், இதர பழங்களைப் பெற முடியாது. ஆனால் கல்ப–தருவிடமிருந்து எல்லா வகையான பழங்களையும் பெற முடியும்.

குருட்டுத்தனம் வேண்டாம்

குருட்டுத்தனம் வேண்டாம் இறையுணர்வு, கடவுளின் திருநாமம், சாஸ்திரக் கருத்துகள் முதலியவற்றை குருட்டுத்தனமாகப் பின்பற்றக் கூடாது என்றும், வாத விவாதங்களுடன் ஆராய்ந்து அறிய வேண்டும் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் தம்மை சந்திக்க வந்த இரண்டு கிறிஸ்துவ...

Latest