வேத இலக்கியங்களில் இந்து சமயம் எனும் வார்த்தையே கிடையாது. சமயம் என்பது ஒருவகையான நம்பிக்கையல்ல. தர்மம் (அல்லது சமயம்) என்பது உயிர்வாழியின் நித்திய இயற்கை. இதனை இரசாயனக் கலவையுடன் ஒப்பிடலாம். சர்க்கரை இனிப்பானதுஶீஅதுவே அதன் இயற்கைத் தன்மை, தர்மம். சர்க்கரை என்பது இனிப்பாகத்தான் இருக்க வேண்டும், காரமாக இருக்கவியலாது. மிளகாய் காரமாகவே இருக்க வேண்டும், இனிப்பானதாக இருந்தால் அதனை நிராகரித்து விடுவோம். சர்க்கரை காரத்தன்மையுடன் இருந்தால், அதனை நிராகரித்து விடுவோம்.
பரம்பொருளின் மூன்று தோற்றங்களை சூரியனை உதாரணமாக வைத்து புரிந்துகொள்ளலாம். சூரியக் கதிர்களைக் கொண்டு சூரியனை எளிதில் உணரலாம், இது முதல் நிலை. சூரிய கிரகத்தை உணர்வது இரண்டாவது நிலை. சூரிய கிரகத்திற்கு நம்மால் செல்ல இயலாது. நவீன விஞ்ஞான கணக்கின்படி சூரியன் பூமியிலிருந்து 930 இலட்சம் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. சூரியன் இவ்வளவு தொலைவில் உள்ளபோதிலும், அதன் வெப்பத்தை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆகவே, சூரிய கிரகத்திற்கு சென்றால் நமது நிலை என்னவாகும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். சூரிய கிரகத்திலிருந்து பல இலட்சம் மைல்களுக்கு முன்பாகவே நாம் சூரிய வெப்பத்தால் எரிக்கப்பட்டுவிடுவோம்.
கடவுள்குறித்து கேட்பதற்குக்கூட மக்கள் தயாராக இல்லை, இந்த நிலைக்கு காரணம் என்ன? போஸ்டனில் பாதிரியார் ஒருவரிடம் நான் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் கூறினார், உங்களது சீடர்கள் அனைவரும் கிறிஸ்தவம் அல்லது யூத மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். முன்பு அவர்கள் தேவாலயங்களுக்கு வந்ததில்லை, இறைவனைக் குறித்து ஒருபோதும் வினவியதில்லை. ஆனால் இன்று அதே ஆண்களும் பெண்களும் இறைவனுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர்.”
விஞ்ஞானம் என்றால் அனுபவபூர்வமான அறிவு என்று பொருள். கிருஷ்ண உணர்வென்பது அனுமானமோ கற்பனையோ அல்ல, இது கணிதத்தைப் போல, அனுபவபூர்வமான அறிவு. கணிதத்தில் இரண்டும்இரண்டும் கூட்டினால், நான்கு. இரண்டையும்இரண்டையும் கூட்டி நான்கிற்கு பதிலாக ஐந்து என்று கூறவியலாது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என எங்குச் சென்றாலும் இரண்டும் இரண்டும்நான்குதான். இதை அனைவரும் ஒப்புக்கொள்வர்; ஏனெனில், இஃது ஒரு விஞ்ஞானம்.
கிருஷ்ண பக்தி சர்வாதிகாரமா, பூரண அதிகாரத்தை ஏற்பது நல்லதா, கிருஷ்ண பக்தன் அதிபரானால் மற்ற மதங்களுக்கு அனுமதி உண்டா முதலியவற்றை ஸ்ரீல பிரபுபாதரும் அவரது சீடர்களும் இங்கே விவாதிக்கின்றனர்.