உலகெங்கிலும் உள்ள மனித சமுதாயம், நான்கு வர்ணங்களாகவும் (ஜாதிகளாகவும்), நான்கு ஆஷ்ரமங்களாகவும் (வாழ்வின் பருவங்களாகவும்) பிரிக்கப்பட்டுள்ளன. புத்திசாலிகளின் பிரிவு, போர் புரிவோரின் பிரிவு, விவசாயம் செய்வோரின் பிரிவு, தொழிலாளர்களின் பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளாகும். இவை ஒருவரின் தொழிலுக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு பிரிக்கப்பட்டுள்ளன, பிறப்பினால் அல்ல. மாணவப் பருவம், இல்லற பருவம், ஓய்வு பெற்ற பருவம், பக்திப் பருவம் ஆகிய நான்கும் வாழ்வின் பருவங்களாகும். மனித சமுதாயத்தின் சிறப்பான நன்மைக்கு இப்பிரிவுகள் அவசியம்; இல்லையெனில் எந்த சமூக அமைப்பும் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைய முடியாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவிலும், பரம அதிகாரியான முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்துவதே நோக்கமாக இருக்க வேண்டும்.
மக்கள் தங்களது பிரச்சனைகளை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் பிரச்சனை என்று எதுவுமே இல்லை. ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம், கடவுள் அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளார். அவர் அனைத்தையும் குறைவற்றதாக, முழுமையானதாக படைத்துள்ளார். பறவைகளுக்காக பற்பல பழங்கள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்--தேவைக்கு அதிகமாகவே கொடுத்துள்ளார். பூர்ணம் இதம், கிருஷ்ணர் ஏற்கனவே எல்லாவற்றையும் போதிய அளவில் தந்துள்ளார்.
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் அனுபவிக்கலாம், ஆனால் அவ்வாறு அனுபவிப்பதால், நீங்கள் வாழ்வின் உண்மையான குறிக்கோளை மறந்துவிடுகிறீர்கள். இதுவா புத்திசாலித்தனம்? உங்களது அடுத்த பிறவியை முன்னேற்றிக் கொள்வதற்காக இந்த மனித உடல் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் உங்களது மறுபிறவியில் நாயாகப் பிறக்க நேர்ந்தால், அது வெற்றியா? கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அப்போது, நாயாக (Dog) மாறுவதற்குப் பதிலாக, கடவுளைப் (God) போன்று மாறுவீர்கள்.
வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
உலக ஒற்றுமை, உலக அமைதி என்பது பலரும் விரும்பக்கூடிய ஒன்று. சர்வதேச மாணவ சமுதாயத்தினரிடையேஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய கீழ்காணும்...