பின்வரும் கட்டுரை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால், அக்டோபர் 28, 1976 அன்று, விருந்தாவனத்தில்...
பக்தி, ஞானம், மற்றும் துறவின் இலட்சணங்கள் பொருந்திய பல்வேறு வைஷ்ணவர்கள் இந்தியாவில் இருந்தனர். எனினும், கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு ஸ்ரீல பிரபுபாதர் ஒருவரே தக்க தகுதிகளைப் பெற்றிருந்தார் என்பதே உண்மை. பகவான் சைதன்யரின் உபதேசங்கள், ஆன்மீக குருவின் ஆணை, கிருஷ்ணரின் திருநாமம் ஆகியவற்றின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, இந்தியாவிற்கு வெளியே கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்வதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டவர் ஸ்ரீல பிரபுபாதர் மட்டுமே.
பெட்ரோல் பிரச்சனை என்னும் மற்றொரு பிரச்சனையை உருவாக்கி யுள்ளனர். நாகரிகம் என்ற பெயரில் இந்த பிரச்சனையை உருவாகியுள்ளது. இந்த மோட்டார் கார்கள் வருவதற்கு முன்பு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் விருந்தினர் ஒருவருக்குமிடையில் ஆகஸ்ட் 14, 1971ஆம் ஆண்டில் இலண்டன் நகரில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி
ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள்...
இந்த ஜடவுலகில் ஆண்-பெண் உறவு மிகவும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. மனித சமுதாயத்தில் மட்டுமின்றி, பூனைகள், நாய்கள், பறவைகள் என எல்லா உயிரினங்களிலும் ஆண்-பெண் ஈர்ப்பு உள்ளது. அஃது ஏன்? அதற்கான பதில், ஜன்மாத்யஸ்ய யத:, என்று வேதாந்த சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஈர்ப்பு பரம்பொருளிடம் இருக்கும் காரணத்தினால், இந்த ஜடவுலகிலும் அஃது உள்ளது. பரம்பொருளிடம் ஈர்ப்பு இல்லாவிடில், இவ்வுலகத்தில் எவ்வாறு அது வெளிப்பட்டிருக்க முடியும்?