ஆனால் நாம் பல்வேறு தர்மங்களை உருவாக்கி வைத்துள்ளோம், ஜடவுலகில் மகிழ்ச்சியாக இருப்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக திட்டங்களைத் தீட்டி வருகிறோம். ஆனால் இந்த உலகம் து:காலயம் அஷாஷ்வதம் (துன்பத்தின் இருப்பிடம்) என்று புருஷோத்தமராகிய
முழுமுதற் கடவுளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உலகம் துன்பத்திற்கான இடமாகும், இந்த உடல் துன்பத்திற்கான உடலாகும், இந்த பூமி துன்பத்திற்கான பூமியாகும். ஆனால் நாம் இவற்றைப் புரிந்துகொள்வதில்லை
ஏன் ஆன்மீக குரு? ஆன்மீக வாழ்வினுள் நுழைவதற்கு பரம புருஷரின் கருணை, ஆன்மீக குருவின் கருணை ஆகிய இரண்டு விஷயங்கள் அவசியம் என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வலியுறுத்தியுள்ளார்: ப்ரஹ்மாண்ட ப்ரமிதே கோன பாக்யவான் ஜீவ குரு க்ருஷ்ண ப்ரஸாதே
கனவான்களே, தாய்மார்களே, இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஸங்கீர்த்தன இயக்கம் வேத சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டதும் மிகுந்த அங்கீகாரம் பெற்றதுமாகும். உங்களில் பெரும்பாலானோர் பகவத் கீதையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், "பற்பல பிறவிகளுக்குப் பிறகு, புத்திசாலி மனிதன் என்னிடம் சரணடைகின்றான், வாஸுதேவனான நானே எல்லாம் என்பதை உணர்கிறான்."
மயங்கியுள்ள நமது உணர்வுகிருஷ்ண பக்தி இயக்கம் என்னும் இந்த முக்கியமான இயக்கம், எல்லா உயிர்வாழிகளையும் தன்னுடைய மூல உணர்விற்கு கொண்டு வருவதற்கானதாகும். பல்வேறு மனநோய் மருத்துவமனைகள்...