பெறுதல், அளித்தல் போன்றவற்றிற்கு மேலாக, பக்தித் தொண்டாற்றுகையில் ஒருவன் தனக்குள்ள அந்தரங்கமான பிரச்சனைகளையும் துன்பங்களையும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒப்படைக்க வேண்டும். “கிருஷ்ணரே, நான் இவ்விதமாகக் கஷ்டப்படுகின்றேன். அலைமோதும் இந்த ஜட மயக்கக் கடலில் நான் விழுந்து விட்டேன். அன்புடன் என்னைக் காப்பீராக.
கிருஷ்ண உணர்வு என்பது பயிற்சி பெற்ற பக்தி யோகிகளின் மிகவுயர்ந்த யோக நிலையாகும். பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரால் வழங்கப்பட்டதும் பதஞ்சலியால் பரிந்துரைக்கப்பட்டதுமான யோக முறை இன்றைய மக்கள் பயிலக்கூடிய ஹட யோக முறையிலிருந்து வேறுபட்டதாகும்.
கிருஷ்ண பக்தி அனைவருக்கும் பொதுவானது; இதனை இந்து மதம் என்று கூறி ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைத்துவிடக் கூடாது. இன்றைய இந்து மதத்தில் காணப்படும் பல தெய்வ வழிபாடு, ஜாதி உணர்வு ஆகியவற்றை கண்டிக்கும் ஸ்ரீல பிரபுபாதர், கிருஷ்ண உணர்வின் கோட்பாடுகள் புராதன வேத கலாச்சாரத்திலிருந்து தோன்றியவை என்றும், மதங்களுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய இயக்கம் என்றும் விளக்குகிறார்.
இன்றைய உலகில், நாம் தொழில்நுட்பம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றோம். ஆனால் வாழ்வின் உண்மையான பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை; அவற்றை பகவத் கீதை கோடிட்டுக் காட்டுகின்றது. பகவத் கீதையில் (13.9) ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:க-தோஷானுதர்ஷனம் என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் புத்திசாலிகளாக இருந்தால், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய நான்குமே வாழ்க்கையின் உண்மையான பிரச்சனைகள் என்பதைக் காண முடியும். ஜன்ம என்றால் பிறப்பு, ம்ருத்யு என்றால் இறப்பு, ஜரா என்றால் முதுமை, வ்யாதி என்றால் நோய்.
ஒருவர் கிருஷ்ணரை எந்த விதத்திலும் நினைவுக் கூறலாம். கோபியர்கள் கிருஷ்ணரின் மீதான காதலின் காரணத்தால் அவரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தனர்; சிசுபாலன் கோபத்தின் காரணத்தால் கிருஷ்ணரையே எண்ணிக் கொண்டிருந்தான்; கம்சன் பயத்தின் காரணத்தால் கிருஷ்ணரை இடைவிடாது எண்ணிக் கொண்டிருந்தான். கம்சனும் சிசுபாலனும் அரக்கர்களாக இருந்தனர்; ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரம புருஷ பகவானை நினைத்திருந்ததோடு அல்லாமல், இறக்கும் தருவாயிலும் பகவானை நினைவு கூர்ந்தபடியால் கிருஷ்ணராலேயே அவர்களுக்கு முக்தி வழங்கப்பட்டது.