- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீமத் பாகவத சுருக்கம்

அஜாமிளனின் வாழ்க்கை வரலாறு

ஐந்தாம் ஸ்கந்தத்தின் இறுதியில், பல்வேறு நரக லோகங்களின் வர்ணனைகளைப் பற்றி சுகதேவரிடமிருந்து கேட்டறிந்த பரீக்ஷித் மஹாராஜர் மக்கள் நரக வாழ்விலிருந்து விடுபட்டு முக்தி அடைவதற்கான வழிகளை அவரிடம் வினவினார். அதற்கு சுகதேவர் பின்வருமாறு பதிலளித்தார், “அரசே ஒருவன் இவ்வாழ்வில் உடலாலும் மனதாலும் செய்துள்ள பாவ விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கு சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிராயச்சித்தங்களைச் செய்ய வேண்டும். மருத்துவர்கள் நோயின் கடுமைக்கு ஏற்ப சிகிக்சை அளிப்பதுபோல, பாவங்களின் கடுமைக்கு ஏற்ப அவரவர் செய்ய வேண்டிய பிராயச்சித்தங்களை விரைவில் அவசியம் மேற்கொள்ள வேண்டும்; ஏனெனில், மரணம் வரும் நேரம் எதுவென்று யாரால் அறிய இயலும்?”

நரக லோகங்களின் வர்ணனை

உயிர்வாழிகள் பல்வேறு பெளதிக நிலைகளில் வைக்கப்படுவதற்கான காரணம் குறித்து சுகதேவ கோஸ்வாமியிடம் மன்னர் பரீக்ஷித் வினவினார். அதற்கு சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு பதிலளித்தார். மக்கள் அனைவரும் பௌதிக இயற்கையின் முக்குணங்களால் பாதிக்கப்படுகின்றனர். ஸத்வ குணத்தில் செயலாற்றுபவன் சமயச் சார்புடையவனாகவும் மகிழ்ச்சி உடையவனாகவும் இருக்கிறான். ரஜோ குணத்தில் செயல்படுபவன் பல்வேறு இன்ப துன்பங்களைக் கலந்து பெறுகிறான். தமோ குணத்தில் செயல்படுபவனோ பாவச் செயல்களில் ஈடுபட்டு, அறியாமையின் அளவிற்கு ஏற்ப பல்வேறு நரக லோகங்களுக்கு இழுத்துச் செல்லப்படுகிறான்.

கீழுலக ஸ்வர்கங்கள்

சூரியனுக்கு கீழே 80,000 மைல் தொலைவில் இராகு கிரகம் உள்ளது. சிம்ஹிகா என்பவரின் மைந்தன் தேவராக இருப்பதற்கும் கிரகத்தின் அதிபதியாக இருப்பதற்கும் முற்றிலும் தகுதியற்றவன் என்றபோதிலும், முழுமுதற் கடவுளின் அருளால் அவன் இராகு கிரகத்திற்கு அதிபதியாக விளங்குகிறான். பகவான் மோஹினி ரூபம் ஏற்று தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கியபோது, இராகு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே தொந்தரவு செய்து அவர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் தடுத்தான்.சூரியன் மற்றும் சந்திரனுக்கு இராகு இடையூறு செய்யும் காலமே கிரகண காலம் என்று அழைக்கப்படுகிறது.

கிரக நட்சத்திர மண்டலங்களின் வர்ணனை

அனைத்து கிரகங்களின் அரசனாக சூரியன் விளங்குகிறார். அவர் முழுமுதற் கடவுளின் கட்டளைக்கேற்ப மெதுவாகவோ வேகமாகவோ மிதமாகவோ பயணிக்கிறார். தம் கதிர்களின் செல்வாக்கினால் இப்பிரபஞ்சத்தைக் காப்பதோடு அதை முறையாகவும் வைத்திருக்கிறார். அவர் தம் ஒளியால் அனைத்து உயிர்வாழிகளும் காண்பதற்கு உதவுகிறார். சூரிய பகவான் மேஷ ராசி மற்றும் துலா ராசியில் (சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில்) சஞ்சரிக்கும்போது, பகலும் இரவும் சமமாக இருக்கிறது. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ஐந்து ராசிகளில் (வைகாசி முதல் புரட்டாசி வரை) சஞ்சரிக்கும்போது, ஒவ்வொரு மாதமும் இரவு நேரம் ஒவ்வொரு நாழிகை (24 நிமிடங்கள்) வீதம் குறைந்து கொண்டே வருகிறது. இவ்வாறாக பகல் நேரம் அதிகரிக்கிறது.

ஜம்புத்வீபத்தின் வர்ணனைகள்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது. தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Latest

- Advertisement -spot_img