குற்றமற்ற அறிவைப் பெற டார்வினை நம்புவதா? கிருஷ்ணரை நம்புவதா?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

குற்றமற்ற, பக்குவமான அறிவைப் பெற விரும்பும் மக்கள் மன அனுமானத்தினால் உருவான டார்வின் போன்ற விஞ்ஞானிகளை ஏற்பதற்கு பதிலாக, குற்றமற்ற நபரிடமிருந்து குற்றமற்ற அறிவைப் பெற வேண்டும் என்பதுகுறித்து ஸ்ரீல பிரபுபாதர் மானுடவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் கேரோல் கெமெரோனுடன் உரையாடுகிறார்.

ஸ்ரீல பிரபுபாதர்: நமது வாழ்நாள் எழுபது அல்லது எண்பது வருடங்களே. இருந்தும்கூட டார்வினுடைய கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான ஆண்டுகளைக் கணக்கிடுகின்றனர். வாழ்வது எழுபது எண்பது ஆண்டுகளே; அவர்கள் எவ்வாறு கோடிக்கணக்கான ஆண்டுகளைக் கணக்கிடுகின்றனர்? இது நம்புவதற்கு சாத்தியமற்றது. டார்வினுடைய கொள்கை வெறும் மன அனுமானமே அன்றி வேறல்ல. இது மக்களைத் தவறாக வழிநடத்துவதாகும். நேர்மையான மனிதன் மற்றவர்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது. தனது அறிவு ஓர் எல்லைக்குட்பட்டது என்பதை ஒருவன் உணர வேண்டும். எனது கொள்கையை மற்றவர்களின் மீது எவ்வாறு திணிக்க இயலும்? அது சரியல்ல.

பெயரளவு கலாச்சார தலைவர்களான இத்தகு விஞ்ஞானிகள் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர். சற்று சிந்தித்து பாருங்கள், “என்னிடம் பக்குவமான ஞானம் இல்லை. நான் வெறுமனே கொள்கைகளை மட்டுமே உருவாக்குகிறேன். என்னிடம் நிரூபிக்க இயலாத கொள்கைகளைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனாலும் அதைப் பற்றி நான் யோசிப்பதில்லை, மக்களை தவறாக வழிநடத்துவேன்.” இத்தகு ஏமாற்று வேலை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எங்கும் இதுபோன்ற ஏமாற்று வேலைதான் நிகழ்ந்து கொண்டுள்ளது. நேர்மையான மனிதன் பிறரை ஏமாற்றுவதிலிருந்து விலகியிருக்க வேண்டும். “ஆனால், அஃது என்னைப் போன்ற விஞ்ஞானிகளுக்குப் பொருந்தாது. நான் கொள்கைகளை உருவாக்குவேன், அதுகுறித்த வெற்று பேச்சால் மக்களை ஏமாற்றுவேன்.”

முதலில் நாம் முறையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும், அதன் பின்னரே அதனை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். இதுவே எங்களது கருத்து. முதலில் உங்களது வாழ்வைப் பக்குவப்படுத்திக்

கொள்ளுங்கள்; பிறகு மற்றவர்களுக்கு அறிவை வழங்க முயலுங்கள். உங்களிடம் தெளிவான ஞானம் இல்லாதபோது ஏன் மற்றவர்களுக்கு அறிவை வழங்க முயல்கிறீர்?

கேரோல்: சுவாமிஜி! முழுமையான அறிவு ஒருவரிடம் இருக்க முடியுமா? அறிவு உண்மையிலேயே முழுமையானதாக இருக்க முடியுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.

கேரோல்: அதாவது, எனக்குத் தெரிந்தவரை இறுதியில் வேண்டுமானால் எனக்கு முழு அறிவு கிடைக்கலாம். ஆனால், தற்போது அனைத்தும் குழப்பமாகவே இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது நம் அறிவு சரியானது, முழுமையானது என்பதை எவ்வாறு உறுதியாகக் கூற முடியும்?

ஸ்ரீல பிரபுபாதர்: முழுமையானவரிடமிருந்து அறிவைப் பெற முயற்சிக்கும்போது, உங்களால் பக்குவமான அறிவை உடனடியாகப் பெற இயலும். அதற்கு மாறாக, ஏமாற்றுக்காரனிடமிருந்து அறிவுரை பெற்றால், நாம் பெறுகின்ற அறிவு முழுமையற்றதாகவே இருக்கும். அறிவு என்பதை யாரேனும் ஒரு நபரிடமிருந்தே பெற இயலும். நான் ஒரு பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, யோகா மையத்திற்கோ செல்லும்போது, உண்மையில் ஓர் ஆசிரியர் அல்லது குருவிடம் செல்கிறேன். உங்கள் ஆசிரியர் அல்லது குரு என்பவர் சரியானவராக இருப்பாரானால், உங்களுக்கு சரியான அறிவு கிட்டும். ஆனால் ஆசிரியர் போலியாக இருப்பாரானால், அவர் தரும் அறிவும் போலியானதாகவே இருக்கும்.

கேரோல்: ஆசிரியர் சரியானவராக இருந்தால், அவர் தரும் அறிவும் சரியானதாக இருக்குமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.

கேரோல்: அந்த அறிவு நமக்கு உடனடியாகக் கிடைத்து விடுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். உதாரணமாக, நாங்கள் பகவத் கீதையிலிருந்து அறிவை வழங்குகிறோம். அது முழுமையான அறிவு. நீங்கள் இதனைப் பெறும்போது, நீங்களும் முழுமை அடைகிறீர்கள்.

கேரோல்: உங்களது செயல்கள் முழுமையானதாகி விடுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஓ, நிச்சயமாக. நீங்கள் பகவத் கீதையைப் படித்திருக்கிறீர்களா?

கேரோல்: இதுவரை இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: பகவத் கீதையில் பகவான் நமக்கு மன்-மனா பவ மத்-பக்தோ என்று அறிவுறுத்துவதைக் காணலாம். “எப்பொழுதும் என்னையே நினை” என்று அவர் கூறுகிறார். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, என்று கூறும்போது நாங்கள் கிருஷ்ணரையே நினைக்கிறோம். எங்களது பூர்வீக ஆச்சாரியர்களின் வழிமுறையைப் பின்பற்றுகிறோம். எனவே, எங்களது செயல்கள் குறைவற்றவை. எனது மருத்துவர் கூறுகிறார், “இந்த மருந்தை இந்த வேளைக்கு இந்த அளவு எடுத்துக்கொள்ளுங்கள், இதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யுங்கள்.” அவர் கூறுவதை நான் கேட்டால் போதும், குணமடைவேன்.

கேரோல்: அதற்குப் பின்னர், ஒரு மனிதன் தனது செயல்களைப் பற்றி ஆராய வேண்டுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. நீங்கள் குறைவற்ற

வரிடமிருந்து குறைவற்ற அறிவைப் பெறும்போது, அதில் ஆராய்ச்சிக்கு வேலையே இல்லை.

கேரோல்: ஆக, அது முற்றிலும் நம்பிக்கையைப் பொறுத்தது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஒரு குழந்தையைப் பாருங்களேன். “எனது தந்தை குற்றமற்றவர்” என்று குழந்தை எண்ணுகிறது. உண்மையில், தந்தையானவர் குற்றமற்றவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் குழந்தையிடமாவது குற்றமற்றவராக இருக்க வேண்டும். அந்தச் சூழ்நிலையில், தாய்தந்தையர் எதைக் கூறினாலும், குழந்தை அதனை பிழையில்லாத அறிவாக ஏற்கிறது.

உதாரணமாக, “அன்புள்ள மகனே, இதுதான் மேஜை” என்று தந்தை கூறுகிறார். அந்தக் குழந்தைக்கு அது மேஜை என்று தெரியாது. இருப்பினும், தந்தை சொல்வதை அப்படியே ஏற்று, “இது மேஜை” என்று குழந்தையும் கூறுகிறது. அதுவே உண்மை. அவனது அறிவு குறைவற்றது. எளிமையாகக் கூறினால், குழந்தை குறையுடையதாக இருப்பினும் குறைவற்ற தந்தையின் அறிவை வழிமொழிவதால், அக்குழந்தை கூறுவதும் குறைவற்றதாகிறது.

“தந்தையே, இஃது என்ன? அஃது என்ன?” என பல்வேறு கேள்விகளை தந்தையிடம் குழந்தை கேட்கின்றது. தந்தையும் சிரித்துக் கொண்டே, “இது தான் மணி, இதனை ஒலிக்கச் செய்ய இந்தப் பொத்தானை அழுத்த வேண்டும்,” என விளக்குகிறார். இவ்வாறே அக்குழந்தை முழுமையான அறிவைப் பெறுகிறான். தன் தந்தை சொல்வதற்குக் கட்டுப்பட்டு நடக்கிறான். அதன்படி, “மணி ஒலிக்கிறதே” என்று எண்ணி வியக்கிறான்.

ஆக, குற்றமற்ற அறிவு உண்டு. குழந்தையின் அறிவு குறைபாடுடையதாக இருப்பினும், அதனால் பெறப்படும் அறிவு குற்றமற்றதாக உள்ளது. இது சாதாரண அறிவு. இதே போல, உயரிய அறிவை குறைவற்றவரிடமிருந்து பெறுவோமானால், நமது உயரிய அறிவும் குறைவற்றதாகவே இருக்கும்.

ஆனால் டார்வின் போன்ற பக்குவமற்ற மானுடவியலாளர்களிடமிருந்து அறிவைப் பெற்றால், அந்த அறிவு பக்குவமற்றதாகவே இருக்கும். எனவே, இந்த முழுமையற்ற அறிவைப் பெறுவதற்காக நாம் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்?

கேரோல்: ஒருவேளை குறைவற்றவர் என்பதற்கு நாம் வைத்திருக்கும் அளவுகோல் மிகச் சிறியதாக இருக்கலாம், அதனால்தான் குற்றமற்றவரைக் காண்பது அரிதாக உள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: மக்கள் ஏமாற்றப்பட தயார் என்றால், நான் சிறந்த ஏமாற்றுக்காரனாக இருப்பேன். (சிரிப்பு) அது வேறு விஷயம். நான் முனைவர் பட்டம் வாங்கி விட்டு சிறந்த ஏமாற்றுக்காரனாகிறேன்.

கேரோல்: அதுதான் உண்மையாக உள்ளது. நாம் எவ்வளவு அக்கறையுடன் குறைவற்றவரைத் தேடினாலும் கிடைக்க

வில்லையே!

ஸ்ரீல பிரபுபாதர்: அதனால்தான் நாங்கள், “கிருஷ்ணர் இதோ இருக்கிறார், இவரே குறைவற்றவர். ஏற்றுக்கொள்ளுங்கள்” என்னும் இச்செய்தியை உங்களுக்குத் தருகிறோம். ஆனால் நீங்கள் அவரைப் பின்பற்றுவதில்லை. நான் முன்னர் கூறியதைப் போல இயேசு கிறிஸ்துவும் முழுமையானவரே, ஆனால் நீங்கள் அவரைப் பின்பற்றுவதில்லை.

கேரோல்: ஆம்.

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுக்கு அவரைப் பின்பற்ற விருப்பமில்லை. நீங்கள் டார்வினைப் பின்பற்றுகிறீர்கள். அது யாருடைய குற்றம்? குற்றமற்றவரின் குற்றமா? அல்லது உங்களின் குற்றமா? குற்றமற்றவரிடமிருந்து அறிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமில்லை. போலியானவர்

களிடமிருந்தே அறிய விரும்புகிறீர்கள். இதுவே உங்களது குறைபாடு.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives