1579இல் நிகழ்ந்த புத்தக விநியோகம்

Must read

1579ஆம் ஆண்டின் கௌர பூர்ணிமா அன்று நரோத்தம தாஸ தாகூர் அவர்கள் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமிக்கு  ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் அந்த ஒரு வருடத்தின் புத்தக விநியோகம் குறித்த தகவலை வழங்கியுள்ளார்.

ஸ்ரீநிவாஸ ஆச்சாரியரின் குழு:

வைஷ்ணவ தோஷணியுடன் கூடிய பாகவதம்—6 பிரதிகள்

ஞான தாஸரின் பாடல்கள்—23 பிரதிகள்

கோவிந்த தாஸரின் பாடல்கள்—19 பிரதிகள்

நரோத்தம தாஸரின் பிரார்த்தனா—11 பிரதிகள்

பக்தி ரஸாம்ருத சிந்து—1 பிரதி

சைதன்ய பாகவதம்—22 பிரதிகள்

லோசன தாஸரின் சைதன்ய மங்கலம்—6 பிரதிகள்

ஹரி பக்தி விலாஸம்—1 பிரதி

முராரி குப்தரின் கர்சா—1 பிரதி

நரோத்தம தாஸரின் குழு:

பாகவதம்—2 பிரதிகள்

ஞான தாஸரின் பாடல்கள்—13 பிரதிகள்

கோவிந்த தாஸரின் பாடல்கள்—21 பிரதிகள்

நரோத்தம தாஸரின் பிரார்த்தனா—56 பிரதிகள்

உஜ்வல நீலமணி—3 பிரதி

சைதன்ய பாகவதம்—45 பிரதிகள்

சைதன்ய சந்திராமிருதம்—5 பிரதிகள்

கௌராங்க பத்யாவளி (வாஸுதேவ கோஷ் இத்யாதி)—34 பிரதிகள்

சியாமானந்த தாஸரின் குழு:

பாகவதம்—4 பிரதிகள்

ஞான தாஸரின் பாடல்கள்—10 பிரதிகள்

கோவிந்த தாஸரின் பாடல்கள்—11 பிரதிகள்

இதர பாடல்கள்—34 பிரதிகள்

நரோத்தம தாஸரின் பிரார்த்தனா—16 பிரதிகள்

பக்தி ரஸாம்ருத சிந்து—5 பிரதி

உஜ்வல நீலமணி—1 பிரதி

சைதன்ய பாகவதம்—25 பிரதிகள்

சைதன்ய சந்திராமிருதம்—15 பிரதிகள்

கௌராங்க பத்யாவளி (வாஸுதேவ கோஷ் இத்யாதி)—14 பிரதிகள்

நரோத்தம தாஸ தாகூர் தமது கடிதத்தினை பின்வரும் உணர்ச்சிபூர்வமான குறிப்புடன் நிறைவு செய்துள்ளார்:

“குறைவான நூல்களையே விநியோகம் செய்ய முடிகிறது என்பதை எண்ணி மிகவும் வருந்துகிறேன். எவரேனும் ஒருவர் வருங்காலத்தில் தோன்றி நூதன இயந்திரத்தினை கண்டுபிடித்தால் தவிர, பௌதிக உலகில் மஹாபிரபு வழங்கிய பிரேம தனத்தினை மக்களுக்கு வழங்குவதும் அவர்கள் வளர்த்துக்கொள்வதும் அசாத்தியமானதாகும். நூதன இயந்திரத்தினால் எண்ணற்ற நூல்கள் அச்சிடப்படும் காலத்தில் பிறந்து, அந்நூல்களை வீதிகளிலும் சந்தைகளிலும் பரவலாக விநியோகிக்க விரும்புகிறேன், அதற்காக பிரார்த்திக்கின்றேன். அதன் மூலமாகவே மஹாபிரபுவின் கருணையைப் பெற முடியும். புத்தக விநியோகம் இவ்வளவு குறைவாக இருக்கும் பட்சத்தில், என்னுடைய ஜபம், பூஜை, ஹரி-கதா விவாதம் முதலியவற்றால் என்ன பயன்?”

ஆதாரம்: விருந்தாவனத்தின் ராதா-தாமோதரர் கோயிலின் நூலகத்திலிருந்து பெறப்பட்ட ஓலைச்சுவடிகள்

ஆசிரியர் குறிப்பு

அச்சு இயந்திரங்கள் இல்லாத காலகட்டத்தில், ஓலைச் சுவடிகளின் கையெழுத்து பிரதிகளை வைத்து நம்முடைய ஆச்சாரியர்கள் புத்தக விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர். நரோத்தமரின் ஏக்கத்தை பூர்த்தி செய்வதுபோல, இன்றைய உலகின் நவீன இயந்திரங்கள் அற்புதமான நூல்களை மக்களுக்கு வழங்க நமக்கு உதவுகின்றன. ஸ்ரீல பிரபுபாதர் இதனை நன்கு உணர்ந்து, ஆச்சாரியர்களின் நூல்களில் இருக்கும் சாரத்தினை நவீன உலகிற்கு ஏற்றாற்போல தமது நூல்களில் வழங்கியுள்ளார்.

ஓலைச்சுவடிகளை எடுத்து அதை அப்படியே புதிய ஓலைச்சுவடிகளில் எழுதித் தாருங்கள் என்று ஸ்ரீல பிரபுபாதர் நம்மிடம் கூறவில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம், அச்சடிக்கப்பட்ட நூல்களை எடுத்துக் கொண்டு வீதிகளுக்கும் சந்தைகளுக்கும் சென்று, நாம் காணும் நபர்களுக்கு வழங்க வேண்டியது மட்டுமே. உலகெங்கிலும் டிசம்பர் மாதத்தில் நிகழும் தொடர் புத்தக விநியோகத்தில் உற்சாகத்துடன் பங்குகொள்வோம். அப்போதுதான் நம்முடைய ஜபம், பூஜை, சாஸ்திர அறிவு முதலியவை அனைத்தும் உண்மையான பயனைத் தரும். இவ்வளவு வசதிகளுக்கு மத்தியிலும், நம்முடைய புத்தக விநியோகம் குறைவாக இருந்தால், அது நிச்சயம் வருந்தத்தக்க நிலையாகும்.

உற்சாகத்துடன் புத்தக விநியோகம் செய்வோம்! கிருஷ்ணரின் மீதான தூய அன்பினை அனைவருக்கும் வழங்குவோம்!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives