—தனஞ்ஜய தாஸரின் பேட்டியிலிருந்து
ஒருமுறை பிரபுபாதருடன் நாங்கள் நடந்துக் கொண்டிருக்கையில், ஓரிடத்திலிருந்த புல் அனைத்தும் மஞ்சள் நிறத்துடன் காட்சியளித்தன. அச்சமயத்தில், அங்கே நின்றுவிட்ட ஸ்ரீல பிரபுபாதர் அந்தப் புல்லைக் காட்டி வினவினார், “புல் சில இடங்களில் பச்சையாகவும் சில இடங்களில் மஞ்சளாகவும் இருப்பது ஏன்?”
பிரபுபாதரின் வினாவிற்கு குருதாஸர் சில நடைமுறை காரணங்களை எடுத்துரைத்தார். “மண்ணின் தன்மை காரணமாக இருக்கலாம், அல்லது அதிகமான மழை காரணமாக இருக்கலாம்.”
ஸ்ரீல பிரபுபாதரோ அந்தப் புல்லை வைத்து அற்புதமான ஒரு பாடத்தை எங்களுக்குக் கற்பித்தார்: “இந்தப் புல் அதன் வேரிலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதால் மஞ்சளாக உள்ளது. எல்லா தாவரங்களும் அவற்றின் வேரிலிருந்து ஊட்டச்சத்தைப் பெறுகின்றன. அவை தங்களின் வேர்களிலிருந்து விடுபட்டவுடன், அங்கு சிரமம் ஏற்படுகிறது. அதுபோலவே, நாமும் கிருஷ்ணரிலிருந்து விடுபட்டிருப்பதால், இந்த பௌதிக உலகில் துன்பப்படுகிறோம். கிருஷ்ணருடன் நாம் தொடர்பு கொண்ட மாத்திரத்தில், நமது வாழ்க்கை வெற்றியடையும்.”
புல்லை வைத்து பாடம் நடத்திய ஸ்ரீல பிரபுபாதர் வாழிய வாழியவே!
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!