—ஸ்ருத கீர்த்தி தாஸரின் பேட்டியிலிருந்து
விருந்தாவனத்தில் ஒருநாள் யமுனை நதிக்கரை வழியாக நாங்கள் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த வேளையில், நதியிலிருந்து சிறிது நீரை எடுத்து வருமாறு ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். சியாமசுந்தர பிரபு தனது கை நிறைய நீர் எடுத்து வந்தார். ஸ்ரீல பிரபுபாதர் தமது தலையில் சில நீர்த்துளிகளைத் தெளித்துக் கொண்டு, எங்கள் அனைவரையும் அவ்வாறு செய்யுமாறு கூறினார்.
“இது யமுனையில் நீராடியதற்கு சமமானது,” என்று அவர் கூறினார்.
யமுனை நதியில் உள்ள பெரிய கடல் ஆமைகளால் எங்களுக்குக் காயம் ஏற்படலாம் என்பதால், நதியில் இறங்க வேண்டாம் என பக்தர்களை ஸ்ரீல பிரபுபாதர் எச்சரித்தார். இவ்வாறாக, அவர் எல்லா வகையிலும் எங்கள் நலனை விரும்புபவராகத் திகழ்ந்தார்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!