கலி புருஷன் புத்திசாலியா?

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌர ஹரி தாஸ்

கலி காலத்தில் புலியும் புல்லைத் தின்னும், கலி காலம் பொல்லாதது, கலி முற்றிவிட்டது, கலி யுகத்தில் இதெல்லாம் சகஜம் போன்ற வார்த்தைகள் சிலர் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். கலி யுகத்தில் அதர்மச் செயல்கள் தலைவிரித்தாடும் என்பதை இவை சுட்டிக் காட்டுகின்றன. சண்டையும் சச்சரவும் நிறைந்த கலி யுகத்தில் பாவகரமான செயல்கள் கூச்சமின்றி செய்யப்படுவதால், கலி புருஷன் எந்தளவிற்கு மக்களின் உணர்வுகளில் ஊடுருவியிருக்கிறான் என சற்று பார்ப்போம்.

கலி புருஷனின் தோற்றம்

கலி யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டது. தற்போது 5,000 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மீதமுள்ள 4,27,000 வருடங்களில் தர்மம் மேன்மேலும் படிப்படியாகக் குறைந்து, கலி புருஷன் அதர்மச் செயல்களை உச்ச நிலையில் தலை தூக்கி அரங்கேற்றுவான் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துவாபர யுகத்தின் இறுதியில் தன் திவ்யமான லீலைகளை முடித்த பிறகு மீண்டும் ஆன்மீக உலகிற்குச் சென்றார். அதன் பிறகு தோன்றிய கலி புருஷன், ஒருநாள் மூன்று கால்களை இழந்து ஒற்றைக் காலுடன் நின்று கொண்டிருந்த எருதினை மேலும் துன்புறுத்தியபடி, அதன் மீதமிருந்த காலையும் உடைத்துக் கொண்டிருந்தான். (கலி புருஷனின் இச்செயலானது, கலி யுகத்தில் தர்மம் 25 சதவீதத்தில் தொடங்கி, இறுதியில் சூன்யமாகிவிடும் என்பதைக் காட்டுகின்றது) நாட்டைக் காவல் காப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாமன்னர் பரீக்ஷித் அக்காட்சியைக் காண நேர்ந்தது. ஒரு சூத்திரன் மன்னரைப் போல உடையணிந்து கொண்டு எருதை வதைப்பதையும் அதனைக் கண்டு பசு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பதையும் பார்த்த மாத்திரத்தில், மாமன்னர் அவனைக் கொல்வதற்காக வாளை உருவினார்.

கலி யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டது. தற்போது 5,000 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மீதமுள்ள 4,27,000 வருடங்களில் தர்மம் மேன்மேலும் படிப்படியாகக் குறைந்து, கலி புருஷன் அதர்மச் செயல்களை உச்ச நிலையில் தலை தூக்கி அரங்கேற்றுவான் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துவாபர யுகத்தின் இறுதியில் தன் திவ்யமான லீலைகளை முடித்த பிறகு மீண்டும் ஆன்மீக உலகிற்குச் சென்றார். அதன் பிறகு தோன்றிய கலி புருஷன், ஒருநாள் மூன்று கால்களை இழந்து ஒற்றைக் காலுடன் நின்று கொண்டிருந்த எருதினை மேலும் துன்புறுத்தியபடி, அதன் மீதமிருந்த காலையும் உடைத்துக் கொண்டிருந்தான். (கலி புருஷனின் இச்செயலானது, கலி யுகத்தில் தர்மம் 25 சதவீதத்தில் தொடங்கி, இறுதியில் சூன்யமாகிவிடும் என்பதைக் காட்டுகின்றது) நாட்டைக் காவல் காப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாமன்னர் பரீக்ஷித் அக்காட்சியைக் காண நேர்ந்தது. ஒரு சூத்திரன் மன்னரைப் போல உடையணிந்து கொண்டு எருதை வதைப்பதையும் அதனைக் கண்டு பசு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பதையும் பார்த்த மாத்திரத்தில், மாமன்னர் அவனைக் கொல்வதற்காக வாளை உருவினார்.

சூதாட்டம்

சூதாட்டம் என்கிற கொடிய நோயை வசிப்பிடமாகக் கொண்ட கலி புருஷன் பொருளாதார சந்தையை தன் ஆழமான ஊடுருவலால் ஆட்கொண்டுள்ளான்.

சாணக்கிய பண்டிதரின் கூற்றின்படி, விவேகமுள்ள மனிதன் தினந்தோறும் காலையில் சூதாட்டத்தைப் பற்றிக் கேட்க வேண்டும், மதியம் பெண்களைப் பற்றிப் பேச வேண்டும், இரவில் திருட்டு விஷயங்களை உரையாட வேண்டும் என்கிறார். அதாவது, காலையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தனான யுதிஷ்டிர மஹாராஜா விளையாடிய சூதாட்டத்தைப் பற்றியும், மதியம் அன்னை சீதாதேவியின் நற்குணங்களைப் பற்றியும், இரவில் கோகுலத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வெண்ணெய் திருடிய லீலைகளைப் பற்றியும் கேட்க வேண்டும் என்கிறார். இத்தகைய பேச்சுகளில் ஈடுபடத் தவறுவோர், பிரபலமான விளையாட்டு போட்டிகளில் நடக்கும் சூதாட்ட விஷயங்கள், நட்சத்திர பெண்களின் அந்தரங்க விஷயங்கள், நூதன முறைகளில் ஆங்காங்கே நடைபெறும் திருட்டுகள் ஆகிய செய்திகளை காதுகளில் கேட்டுக் கொள்வது உறுதி.

முற்காலத்தில் காலையிலும் மாலையிலும், பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பார்கள். தற்போதைய காலத்தில் காலையிலும் மாலையிலும் செய்தித்தாள்களையே படிக்கிறார்கள். மற்றவர்களின் செயல்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கான ஆர்வம் மக்களிடையே இயற்கையிலேயே இருப்பதை இதிலிருந்து உணரலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான லீலைகளைப் பற்றிக் கேட்பதால் எந்த இழப்பும் இல்லை என்பதையும், சாதாரண மனிதனின் செயல்களைத் தெரிந்து கொள்வதால் எந்த நன்மையும் இல்லை என்பதையும் தீர ஆராய வேண்டும். அந்த காலத்தில் விக்ரஹத்தை வீட்டின் மையப் பகுதியில் வைத்து பஜனை செய்து கை தட்டுவார்கள். தற்போதைய காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை வீட்டின் மையப் பகுதியில் வைத்து, ஏற்கனவே ஆட்டத்தின் முடிவு நிர்ணயிக்கப்பட்ட சூதாட்ட போட்டிகளில் அடிக்கப்படும் சிக்ஸர்களைக் கண்டு கைதட்டுகின்றனர். கைதட்டுகின்ற பழக்கம் யாரையும் விட்டு போகவில்லை என்றாலும், யாருடைய திருப்திக்காக கைதட்டுகிறோம் என யோசித்துப் பார்த்தால் உண்மை நமக்குப் புலப்படும்.

யுதிஷ்டிர மஹாராஜா சூதாட்டத்தில் துரியோதனனுக்கு எதிராகத் தோற்ற பின்னர் கிருஷ்ணரிடம் மனம் வருந்தினார். அதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் கூறினார்: “சூதாட்டத்தில் ஜெயிப்பதற்கு நான் உமக்கு இரண்டு சமிக்ஞ்ஜைகள் கொடுத்தேன், நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. முதலாவதாக, துரியோதனன் தனக்கு பதிலாக தன் மாமன் சகுனி சூதாட்டத்தில் விளையாடுவார் என அறிவித்தபோது, நீங்கள் விவேகத்துடன் ’எனக்கு பதிலாக என் மாமன் கிருஷ்ணர் விளையாடுவார் என்றல்லவா கூறியிருக்க வேண்டும். இரண்டாவதாக, சகுனி ஒவ்வொரு முறையும் பகடையை உருட்டும்போது, தன் குருவை நினைத்து உருட்டினான். நீங்களோ என்னையும் பலராமரையும் நினைப்பதற்குப் பதிலாக பகடை ராஜனை நினைத்து விளையாடினீர்.” யுதிஷ்டிர மஹாராஜா தனது தூய பக்தர் என்பதால், அவரைக் கருவியாக பயன்படுத்திய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், சூதாட்டம் கொடியது என்கிற செய்தியை உலக மக்களுக்கு அறிவிக்கிறார்.

சீட்டாடுதல், தாயக் கட்டைகளை உருட்டுதல், குதிரைப் பந்தயம் போன்றவற்றை மட்டுமே மக்கள் பொதுவாக சூதாட்டம் என தவறாகக் கருதுகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், அதிக இலாபத்தையும் அதிக நஷ்டத்தையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தரக்கூடிய வணிகம் எதுவாக இருந்தாலும், அது சூதாட்டமே. உதாரணமாக, பங்கு சந்தை வியாபாரத்தில் தன் சக்திக்கு மீறி, அனைத்து பணத்தையும் முதலீடு செய்பவர்களும் இதில் அடங்குவர். பங்கு சந்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், கலி புருஷன் அதிகாரபூர்வமாக உலவி வருகிறான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கைதட்டுகின்ற பழக்கம் யாரையும் விட்டு போகவில்லை என்றாலும், யாருடைய திருப்திக்காக கைதட்டுகிறோம் என யோசித்துப் பார்த்தால் உண்மை நமக்குப் புலப்படும்.

நாட்டை ஆளும் மதுபானம்

கலி புருஷனின் மற்றுமொரு வசிப்பிடமான மதுவும் போதைப் பொருட்களும் வாழ்க்கையை முழுமை யாக சீரழிக்கக் கூடியவை. மதுப் பழக்கம் ஒருவரின் ஆரோக்கியம், தன்னம்பிக்கை, செல்வம் மற்றும் எல்லா வற்றையும் அழிக்கக் கூடியதாக உள்ளது. நாட்டை ஆளும் பெரும்பாலான தலைவர்கள்கூட மதுப் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதால், மதுவே நாட்டின் உணர்வையும் பொருளாதாரத்தையும் அரசியலையும் தீர்மானிக்கின்றது. மதுக்கடைகள் மூலமாக வருடத்திற்குப் பல கோடி வருமானம் வருகிறது என்பதைக் கொண்டு, மக்களின் உணர்வு நிலையை சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

பிரபலமான விளையாட்டு வீரர்கள் மது பானத்தை விளம்பரப்படுத்தினால், கலி புருஷனின் வேலை எளிமையாக முடிந்து விடுகிறது. இதுதான் கலி புருஷனின் யுக்தியும் சூழ்ச்சியும் ஆகும். கலி பிரஜைகள் அனைவரும் மது அருந்த வேண்டும் என்பதே கலி புருஷனுடைய விருப்பம்–அப்போது, கலியினால் தனது இராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். தற்போதைய கால கட்டத்தில், கணிசமான பெண்களும் மதுவிற்கு அடிமையாகியுள்ளனர் என்றால் அது மிகையல்ல. மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்கிற எச்சரிக்கை வாசகத்தை படித்த பின்னரும், நண்பர்கள் ஒன்று கூடுமிடங்களிலும், விருந்து நிகழ்ச்சியில் மேலதிகாரிகள் தங்களை ஒதுக்கி விடக் கூடாது என்கிற கௌரவத்திற்காக மது அருந்துபவர்களையும், கலி புருஷன் காணும்போது, குதூகலமும் உற்சாகமும் கிடைக்கப் பெற்று, தன் திட்டத்தை விரிவுபடுத்துவதில் கவனமாகச் செயல்படுகிறான்.

மது அருந்துபவர்களின் களங்கமடைந்த உணர்வை தனது திட்டத்திற்கு ஆதாயமாகப் பயன்படுத்தும் கலி புருஷன், தனது மற்றொரு வசிப்பிடமான மாமிச உணவையும் இவர்களுக்கு அறிமுகப்படுத் துகிறான்.

மது அருந்துபவர்களை கலி புருஷன் காணும்போது, குதூகலமும் உற்சாகமும் கிடைக்கப் பெற்று தன் திட்டத்தை விரிவுபடுத்துவதில் கவனமாகச் செயல்படுகிறான்.

மாமிசம் உண்ணுதல்

இறைச்சிக் கூடம் என்பது கலி புருஷனுடைய மிகப்பெரிய வியாபார சந்தை. பல நபர்களை கலி புருஷன் இத்தொழிலில் ஈடுபடுத்துவதால், நரகத்திற்கு செல்ல இலவச பயணச் சீட்டுகளைத் தாராளமாக விநியோகித்து கொண்டிருக்கிறான். மிருகத்தைக் கொல்ல அனுமதிப்பவன், கொல்பவன், விற்பவன், சமைப்பவன், பரிமாறுபவன், உண்பவன் என அனைவரும் மிருகத்தைக் கொன்ற பாவத்தைப் பெறுகின்றனர் என ஸ்ரீமத் பாகவதம் (1.7.37) குறிப்பிடுகிறது.

தூய்மையான உணர்வுகளை நசுக்கு வதற்கு கலி புருஷன் கையில் எடுக்கும் மற்றோர் அஸ்திரம் தொலைக்காட்சி. தொலைக் காட்சிப் பெட்டியை அங்கீகரிக்கப்பட்ட சாதன மாக மக்கள் கருதுவதால், எவ்வாறு மாமிச உணவைச் சுவையாக சமைப்பது என பல்வேறு ஊடகங்களின் மூலமாக கற்றுக் கொடுத்து, பல்லாயிரக் கணக்கான மக்களைத் தன் வளையத்திற்குள் கொண்டு வருவதில் கலி புருஷன் கைதேர்ந்தவனாக செயலாற்றுகிறான். மாமிசம் உண்பது, குடும்பத்திலும் சமூகத்திலும் தொலைக்காட்சியிலும் அங்கீகரிக்கப்பட்ட சகஜமான செயல் எனக் கருதி, வளரும் குழந்தைகள்கூட பாவத்தின் விளைவுகளை உணராமல், நாக்கின் சுவைக்கு அடிமையாகி விடுகின்றனர்.

சுடுகாட்டில் புதைக்க வேண்டிய இறந்து போன மிருக உடலைத் தாங்களாக முன் வந்து குடும்பத்துடன் ஹோட்டல்களில் பணம் கொடுத்து வாங்கி வயிற்றில் புதைத்து கொள்கின்றனர். இம்மாதிரியான உணர்வை கலி புருஷனைத் தவிர வேறு யாரால் கொடுக்க முடியும்?

இவை மட்டுமின்றி, கலி யுக மருத்துவர்கள், மாமிசமும் முட்டையும் உடலுக்கு நல்லது என நோயாளிகளுக்கு அறிவுறுத்தினால், அதை அவர்கள் அப்படியே எடுத்துக்கொள்கின்றனர். கலி புருஷன் புத்திசாலித்தனத் துடன் தனது வேலையை எளிமையாக்கிக் கொள்கிறான். மாமிசம் உட்கொண்ட பிறகு அடுத்து வருவது, கலி புருஷனின் இன்னொரு வசிப்பிடமான தகாத உடலுறவு.

மாமிசம் உண்ணப்படும் இடங்களும் தகாத உடலுறவு  நடைபெறும் இடங்களும் கலி புருஷன் ஆதிக்கம் செலுத்தும் இடங்களாகும்.

தகாத உடலுறவு

புளிப்புப் பொருட்களுடன் தொடர்பு ஏற்படும்போது பால் எவ்வாறு தயிராக மாறி விடுகிறதோ, அதைப் போல ஆன்மீக உலகில் ஜீவன்களிடம் இருக்கும் கிருஷ்ண பிரேமையானது பௌதிக குணங்களின் தொடர்பு ஏற்படும்போது, காம உணர்வாக மாறி விடுகிறது. காம உணர்வு ஆழமான வேரைக் கொண்டது, இதனைத் தூய்மைப்படுத்த பல ஜன்மங்கள் ஆகும் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காமத்தின் தூண்டுதலினால், கஷ்யப முனிவர், இந்திரன், விஸ்வாமித்திரர், சௌபரி முனி, அஜாமிளன், பில்வமங்கள் தாகூர் என பலரும் தடுமாறியுள்ளனர். கலி பிரஜைகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? தினசரி நாளிதழ்களில் அன்றாடம் வரக்கூடிய செய்தி கள்ளக்காதல்.

திருமணத்திற்குப் பிறகே ஆண், பெண் உறவு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அத்தகு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல், இன்பம் அனுபவிக்க விரும்பும் போது, அஃது அபத்தமான கள்ளக்காதலாக மாறி விடுகிறது, சிலசமயம் கொலையிலும் முடிந்து விடுகிறது.

நெருக்கமான உடலுறவினால் இன்பமடையலாம் என்கிற அறியாமையில், தவறான உடலுறவில் ஈடுபட்டு, பின்னர் பல்வேறு துன்பங்களை கலியின் பிரஜைகள் அனுபவித்து வருகின்றனர். கலி புருஷனின் ஆதிக்கத்தால், திருமணமாகாதோர், மற்றவருடன் திருமணம் செய்தவர், நண்பர்கள் என பல நிலையில் இருக்கும் ஆணும் பெண்ணும் தாமாக விருப்பப்பட்டு உடலுறவு கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

காம உணர்வை அடக்கக் கூடிய சக்தியை பக்தர்களுடைய சத்ஸங்கத்தினாலும், ஹரி நாமத்தை உச்சரிப்பதாலும், பிரசாதத்தை மட்டும் உட்கொள்வதாலும், ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பதாலும் ஒருவர் பெறலாம்.

கலி யுக தோஷங்கள்

கடவுள் இல்லை என கூறுபவர்கள் ஒரு பக்கம்; கடவுள் இருக்கிறார், ஆனால் அவருக்கு உருவம் இல்லை என கூறுபவர்கள் இன்னொரு பக்கம்; கடவுள் இருக்கிறார், அவருக்கு உருவமும் இருக்கிறது, ’நான் தான் அந்த கடவுள் என கூறுபவர்கள் மற்றொரு பக்கம்–மக்களோ இவர்களுக்கு மத்தியில் பெரும் குழப்பத்தை அடைகின்றனர். மேலும், கலி பிரஜைகள் பொதுவாக சண்டைப் பிரியர்கள், அதிர்ஷ்டமற்றவர்கள், மந்த புத்தி கொண்டவர்கள், பெண் பித்தர்கள், சோம்பேறிகள், மற்றும் அற்ப ஆயுளுடையோர். தர்மம், உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, பலம், ஞாபகத் திறன் போன்றவை கலி யுகத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே செல்லும் என ஸ்ரீமத் பாகவதம் (12.2.1) கூறுகின்றது.

கலி புருஷன் புத்திசாலியா?

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட கலி புருஷன் புத்தி கூர்மையானவன் என்றபோதிலும், கிருஷ்ண பக்தியை ஏற்றுக் கொண்ட பக்தர்கள் அவனைக் கண்டு அஞ்சுவதில்லை, கலி புருஷன் தர்மத்தின் நான்கு தூண்களான தூய்மை, தவம், கருணை, மற்றும் உண்மையை அழிப்பதற்காக, தகாத உடலுறவு, போதைப் பொருட்கள், மாமிசம், மற்றும் சூதாட்ட இடங்களை முறையே தன் வசிப்பிடமாகப் பெற்றுக் கொண்டான்.

ஹரே கிருஷ்ண இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர், கலி புருஷனின் தலை நகரான நியுயார்க்கில் கிருஷ்ண பக்தி இயக்கத்தைத் தொடங்கித் தன் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களுக்கு, மாமிசம் உண்ணாமை, தகாத உடலுறவைத் தவிர்த்தல், போதைப் பொருட்கள் அருந்தாமை, சூதாட்டத்தைத் தவிர்த்தல் என்னும் நான்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிமுகப்படுத்தி, கலி புருஷனின் வசிப்பிடத்திற்குக் குறிவைத்து, அவனது பல்லையும் பிடுங்கி விட்டார். பகவானின் புனித நாமத்தை உச்சரித்து நான்கு கட்டுப் பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள் ஒன்று கூடினால், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்.

கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபு எளிமையான மார்க்கத்தினை உபதேசித்துள்ளார். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை தினந்தோறும் உச்சரித்தால், கலியின் தாக்கம் நம்மைப் பாதிக்காமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

 

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives