செல்வந்தரின் மகனை கஞ்சன் என்ற பிரபுபாதர்

Must read

—மஹாபுத்தி தாஸரின் பேட்டியிலிருந்து

மஹாபுத்தி தாஸர் ஸ்ரீல பிரபுபாதரை முதன்முதலாக சந்தித்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்
அச்சமயத்தில் அவரது பெயர் ராண்டி. அவர் செம்பட்டை நிறம் கொண்ட நீண்ட முடியுடன் காணப்படுவார், சான்டியாகோ மாநில பல்கலைக்கழகத்தில் கால்பந்து வீரராகவும், மாணவர் சங்க தலைவராகவும், மாபெரும் செல்வந்த பெற்றோர்களின் மகனாகவும் இருந்தார். அவர் லாஸ்ஏஞ்சல்ஸ் கோயிலில் ஸங்கீர்த்தனத்தில் பங்குகொண்டபோது, பிரபுபாதரின் செயலாளர் அவரை மாடியில் இருந்த பிரபுபாதரின் அறைக்கு அழைத்துச் சென்றார். ராண்டி மகிழ்ச்சியுடன் அங்கு சென்றார். ஆயினும், பிரபுபாதரின் அறைக்குள் நுழைந்தபோது, அங்கே தான் மட்டுமே விருந்தாளியாக இருப்பதைக் கண்டார்.

ஸ்ரீல பிரபுபாதர் அங்கே சந்நியாசிகளாலும் உயர்மட்டக் குழு உறுப்பினர்களாலும் சூழப்பட்டிருந்தார், ராண்டியை யாருக்கும் தெரியாது. சூழ்நிலையை புரிந்துகொள்ள ராண்டி முயன்றபோது, பிரபுபாதர் அவரை நேருக்கு நேராகப் பார்த்து, “ஏன் க்ருபணனாக இருக்கின்றாய்?” என்றவாறு கேட்டு பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டார். “க்ருபணன் என்றால் என்ன?” என்று ராண்டி சிந்திக்கையில், பிரபுபாதரே, “க்ருபணன் என்றால் ‘கஞ்சன்’ என்று பொருள்,” என பதிலளித்தார். உடனே, ராண்டி தமது குடும்பம் செல்வம் மிக்க குடும்பம் என்பதையும் தாமும் தமது பெற்றோர்களும் சுயநலனிற்காக மட்டுமே செல்வத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதையும் எண்ணிப் பார்த்தார். அதற்குள் பிரபுபாதர் கஞ்சன்களின் மனோபாவத்தை எடுத்துரைக்கத் தொடங்கினார்.

இப்போது ராண்டி தனது மனதையும் செயல்களையும் தோற்கடிக்க வைக்கும் பிரபுபாதரின் வார்த்தைகளினால் ஈர்க்கப்பட்டார். பிரபுபாதரின் பேச்சு இவர் மனதில் நினைத்தவற்றை உடனடியாகத் தகர்த்தெறியும் வண்ணம் அடுத்தடுத்த பதில்களுடன்கூடிய உரையாடலைப் போன்றிருந்தது. பிரபுபாதர் சுவற்றில் சாய்ந்தவாறு ராண்டியை பார்த்து கூறினார், “கிருஷ்ணரால் உங்களுக்கு திறமை, செல்வம், அந்தஸ்து முதலியவை வழங்கப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் அவற்றை கிருஷ்ணரின் சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும். உங்களுடைய சுய புலனின்பங்களுக்காக மட்டுமே பயன்படுத்தினால், அது கஞ்சத்தனம் மட்டுமே. நீங்கள் கிருஷ்ண உணர்வை ஏற்காவிடில், உங்களுடைய மனித வாழ்வு வீணாகி விடும்.”

ஸ்ரீல பிரபுபாதர் பக்தித் தொண்டின் வழிமுறைகளை தொடர்ந்து விவரிக்க, ராண்டி தமது கர்வத்தையும் சுயநலத்தையும் விட்டொழிக்கத் தொடங்கினார். பிரபுபாதர் தன்னை கஞ்சன் என்று கூறி விட்டாரே என்று வருந்தினார். இருப்பினும், பிரபுபாதர் தனது மனதை நன்கு உணர்ந்துள்ளார் என்பதை அறிந்து, ராண்டி தனது வழக்கமான கர்வத்தை விட்டொழிக்கத் தொடங்கினார். அவருடைய எண்ணங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, திடீரென்று பிரபுபாதர் ஸ்ரீமத் பாகவதத்தின் பன்னிரண்டாவது ஸ்கந்தத்தை எடுத்து வரச் செய்து, கலி யுகத்தின் இழிவான மனிதர்களுடைய நிலையைப் பற்றி சப்தமாகப் படிக்கத் தொடங்கினார்: “நீண்ட முடியை வைத்திருப்பது தங்களுக்கான அழகு என ஆண்கள் நினைப்பர்.” இதனைக் கேட்ட மாத்திரத்தில், ராண்டி நடுங்கத் தொடங்கினார், ஸ்தம்பித்து நின்றார், “பிரபுபாதர் என்னை முழுமையாக வென்று விட்டார்” என எண்ணினார்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives