ஸ்ரீல பிரபுபாதரின் நினைவுகள்
கூறியவர்: யதுபர தாஸ்
ஒரு மாலை வேளையில், இலண்டனில் உள்ள பக்திவேதாந்த பண்ணையில், ஸ்ரீல பிரபுபாதர் சீடர்கள் சிலருடனும் விருந்தினர்களுடனும் தமது அறையில் அமர்ந்திருந்தார். ஸ்ரீல பிரபுபாதரை பேட்டி காண வந்த ஒரு பெண் நிருபரும் அங்கே இருந்தார். மிதமான கோடைகாலமாக இருந்தபோதிலும், அந்த பெண் நிருபர் குட்டைப் பாவாடையே அணிந்திருந்தார். ஹரே கிருஷ்ண இயக்கத்தைப் பற்றி அவள் எழுப்பிய சில வினாக்களிலிருந்து, அவளுடைய சந்தேகமும் குறை காணும் மனோபாவமும் வெளிப்பட்டன. இருப்பினும், ஸ்ரீல பிரபுபாதர் எப்போதும் போலவே அவளுடைய வினாக்களுக்கு பொறுமையாகவும் அருமையாகவும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அதனால் நம்பிக்கையிழந்த அவள் சவால் விடும் மனோபாவத்தில், “உங்களுடைய ஆட்கள் ஏன் மொட்டையடிக்கின்றனர்?” என வழக்கமான வினாவினை எழுப்பினாள். உடனே, பிரபுபாதர், “நீங்கள் ஏன் கால்களை ஆடையால் மறைத்துக்கொள்ளாமல், கால்கள் வெளியே தெரியும்படி ஆடையணிகிறீர்கள்?” என்று சற்று கோபமாக வினவினார். அவள் வாயே திறக்கவில்லை. அதன் பிறகு, ஸ்ரீல பிரபுபாதர், “கால்கள் வெது வெதுப்பாகவும், தலை குளுர்ச்சியுடனும் இருப்பதே சிறந்தது,” என்றார். உடனே நிருபர் உட்பட அங்கிருந்த அனைவருமே மகிழ்வுடன் சிரித்தனர். அத்துடன் பிரபுபாதர் கூறினார், “இந்த கிருஷ்ண உணர்வு தத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு தலை குளுமையாக இருக்க வேண்டியது அவசியம்.”
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!